அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

புதுடெல்லி: இந்தியாவில் புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்தமாக சிகரெட் நுகர்வு கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் சரிவை சந்தித்துள்ளது. மத்திய சுகாதார துறை அமைச்சகர் சிகரெட் நுகர்வு குறித்த தகவல் அறிக்கை ஒன்றினை பாராளுமன்றத்தில் சமர்பித்தார். அதில், 2014-15 ஆண்டுகளில் சுமார் 93.2 பில்லியன் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2012-13 ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்டதை விட 10 பில்லியன் குறைவு. அதேபோல் சிகரெட் உற்பத்தி 117 பில்லியனில் இருந்து 105.3 பில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க இந்தியாவில் சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில்187 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த உண்மை கண்டறியப்பட்டது.

1980-ல் 53 லட்சமாக இருந்த சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2012-ல் 127 லட்சமாக(1.27 கோடி) உயர்ந்துள்ளது. அதாவது 32 ஆண்டுகளில் இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-