அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கொப்பல்: பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் மீது போலீசில் புகார் அளித்ததற்காக ஒரு முஸ்லீம் குடும்பமே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொப்பல் மாவட்டத்தில் சங்கநல்ல கிராமத்தை சேர்ந்த 7 வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் ஆனந்தப்பா பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது பெற்றோர் புகார் அளித்ததால் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

மாணவிக்கும் அவரது பெற்றோருக்கும் அரசு மறுவாழ்வு மையத்தில் கடந்த 2 மாதங்களாக மனநிலை சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து கிராமத்திற்கு திரும்பிய குடும்பத்தினருடன் வேறு யாரும் பேசவில்லை, வீட்டின் மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தன. வழக்கை வாபஸ் பெறாவிட்டால் தொடர்ந்து கிராமத்தில் வசிக்க முடியாது என்றும் மாணவியின் பெற்றோர் மிரட்டப்பட்டுள்ளனர். இதனால் செய்வது அறியாது திகைத்து வரும் அவர்கள் அரசு நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நன்றி  : தினகரன் 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-