அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய் : தமிழகத்தில் மழைவெள்ளத்தால் சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களும் தன்னார்வலர்கள் உதவி வருகின்றனர்.வளைகுடா நாடுகளான யுஏஇ,குவைத்,சவூதி அரேபியா, ஒமான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்கள் வெள்ள நிவாரண நிதியாகவும், போர்வை,துணிமணிகள், பிஸ்கட் உள்ளிட்ட வகைகளை சேகரித்து தமிழகத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

துபாயில் தமிழக தொழிலாளர்கள் சுமார் 5 டன் வரை அத்திவசிய பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இங்குள்ள இந்திய வர்த்தகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் தமிழக‌ வெள்ள நிவாரண பணிக்கு உதவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

துபாயில் உள்ள தமிழகத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான நாகா என்பவர் கூறுகையில் : எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட துன்பம் போன்று கருதுகிறோம்.நிச்சயம் எங்களால் இயன்ற உதவியை செய்து பாதிக்கப்பட்ட அம்மக்களின் வாழ்வை வளமாக முயற்சிப்போம் என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-