அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வி.களத்தூர், டிச.26
-இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த நாளை மீலாது நபி என முஸ்லிம்கள் உலகம் முழுவதும் கொண்டாடுவது வழக்கம். இதன்படி பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு மீலாது நபி விழா நடைபெற்றது. வி.களத்தூர் சுன்னத் ஜமாத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவிற்கு ஜமாத் தலைவர் லியாகத் அலி தலைமை தாங்கினார். முஹம்மது இப்ராஹிம் , அப்துல் ரஷித், முஹம்மது ஆகியோர் வாழ்த்தி பேசினர். நாகப்பட்டினம் அரபி கல்லூரி முதல்வர் ஜுபைர் அஹமது பாகவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியை மில்லத் நகர் பேஷ் இமாம் அஷ்ரப்அலி தொகுத்து வழங்கினார். முன்னதாக ஜமாத் செயலாளர் பஷீர் அஹமது வரவேற்றார். இறுதியாக முஹம்மது ஆஜம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில்  சுமார் ஆயிரம்பேர்  கலந்து கொண்டனர்.

முன்னதாக அஸார் தொழுகைக்கு பிறகு மதரஸா மாணவ மாணவிகளின் மிலாது ஊர்வலம் நமது ஊரின் அனைத்து தெரு வழியாக நடைப்பெற்றது.இறுதியில் மிலாது விழா நடைப்பெறும் உமர் (ரலி)திடல்  வந்து அடைந்தது ,
  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-