அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ரஷ்யாவுடன் எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடி நிலையில் துருக்கிக்கு உதவி அளிப்பது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும் என சவூதி பிரதம முப்தி அப்துல் அஸீஸ் ஆல் அஷ்ஷெய்க் வலியுறுத்தி உள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப் பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது சவுதி முப்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி ஒரு பெரிய இஸ்லாமிய நாடு அதன் இழப்பு முழு முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட இழப்பாகும், எனவே முஸ்லிம் நாடுகள் உட்பட முஸ்லிம்கள் அனைவரும் துருக்கி நாட்டுக்கு ஆதரவு அழிப்பது கடமையாகும் என மேலும் அவர் அதன் போது குறிப்பிட்டார்.

ரஷ்ய போர் விமானம் ஒன்றை துருக்கி வீழ்த்தியதை அடுத்து இரு நாடுகளுக்குமான உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, துருக்கி மீது பொருளாதார தடைகளை ரஷ்யா சுமத்தியது. இதனை அடுத்து கடந்த வாரம், துருக்கி நாட்டுக்கும் அதன் பொருளாதாரத்திற்கும் முடியுமான அனைத்து வழியிலும் ஆதரவு அளிக்குமாறு சர்வதேசமுஸ்லீம் அறிஞர்கள் ஒன்றியம் உலக முஸ்லிம்களை கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-