அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு முஸ்லி்ம்கள் மீது மேற்கு உலகமும் அமெரிக்காவும் கடுமையாக வெறுப்பு உணர்வுகளை வளர்த்து வந்தது

முஸ்லிம்கள் மீது வெறுப்பை காட்டியவர்களில் அமெரிக்காவின் அதிபதவிக்கு போட்டியிடும் டிரம்ப் என்பரும் ஒருவர்

நமது நாட்டில் முகவரியில்லாத சில மூதேவிகள் முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு விரட்ட வேண்டும் என்று கூறுவது போல் அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு போட்டியிடும் டிரம்ப் என்பர் முஸ்லிம்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க கூடாது என்று விஷம் கக்கினார்

டிரம்பின் இந்த கருத்திற்கு ஐநா சபை கடும் கண்டனத்தை பதிவு செய்திருப்பது போல் ஒட்டு மொத்த அமெரிக்க மக்களும் அவரை கருத்தை நிராகரத்துள்ளனர்

இது பற்றி ஐநா பொது செயலாளர் பான்கிமூன் குறிப்பிடும் போது

மதவெறியை தூண்டும் வகையில் 'டொனால்டு டிரம்ப்' பேசியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என்றார்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை குறிப்பிடும் போது

இந்தக் கருத்தை வெளியிட்டதன் மூலம் அமெரிக்காவின் அதிபராகும் தகுதியை 'டிரம்ப்' இழந்துவிட்டதாக கூறியுள்ளது

அமெரிக்காவின் அடுத்த அதிபர் வேட்பாளர் ஹில்லாரி உள்ளிட்ட பலர்களும் டிரம்பின் கருத்தை கடுமையாக கண்டித்துள்ளனர்

அமெரிக்க இராணுதலைமையகமான பெண்டகன் கூறும் போது

முஸ்லிம்களுக்கு எதிராக அறைகூவல் விடுப்பது அமெரிக்காவின் நலனுக்கு ஏற்றதல்ல என கூறியுள்ளது

ஆக அமெரிக்காவின் அனைத்து தரப்பு மக்களின் ஒட்டுமொத்த எதிற்ப்பையும் டிரம்ப் சந்தித்து இருப்பதின் மூலம் தேற்தலை சந்திக்கும் முன்பே அவர் தோல்வியை தழுவிட்டதாக நோக்கர் கருத்து தெரிவித்துள்ளனர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-