அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சென்னை,

சென்னையில் பெய்த பேய் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

மக்களின் அத்தியாவசிய தேவையாகி போன செல்போன் சேவையும் செயலிழந்தது. பல்வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் தங்கள் வீட்டில் உள்ளவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதேபோல் வீட்டில் உள்ளவர்களும் வெளியில் சென்ற தங்களது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு செல்போன் சேவை பாதிக்கப்பட்டது.

சிலருக்கு அழைப்புகள் கிடைத்தாலும் அந்த அழைப்புகள் வேறு மாநிலத்திற்கு சென்று விடுகிறது. அந்த அழைப்புகளை பெற்றவர்கள் தங்களது மொழியில் பேசுவது இங்குள்ளவர்களுக்கு புரியவில்லை. அழைப்புகள் குழப்பத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.

தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்ற செல்போன் அழைப்புகளால் சென்னை நகர மக்கள் பெரும் தவிப்பிற்கு உள்ளானார்கள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-