அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

இந்தியாவில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பலியானாலும் ஒருவர கூட தண்டிக்கப்படுவதில்லை!!


கலவரங்களை தடுக்க சட்டம் இயற்றவும் மறுப்பு !!!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி எதிர்கட்சியான வங்காளதேச தேசிய கட்சி (பி.என்.பி) நடத்திய முழு அடைப்பின் போது ‘பிஸ்வஜித் தாஸி’ (வயது 24) என்ற ஹிந்து இளைஞர் கொலை செய்யப்பட்டார்.

ஆளுங்கட்சியான ‘அவாமி லீக்’ மாணவர் அணியினர், அரசியல் காரணங்களுக்காக எதிர்கட்சியின் தொண்டர் என்ற அடிப்படையில், ஹிந்து இளைஞர் பிஸ்வஜித்தை கொன்றுவிட்டனர்.

பழைய டாக்காவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, 21 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இவ்வழக்கில், 8 பேருக்கு ‘மரணத்தண்டனை’யும்
13 பேருக்கு ‘ஆயுள்தண்டனை’யும் விதித்தார், நீதிபதி நிஸாமுல் ஹக்.

பட்டப்பகலில் நடந்த கொடூரமான கொலையை சாதாரண கொலையின் வரம்பில் சேர்க்க முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

கொலை செய்யப்பட்டவர் சிறுபான்மை ஹிந்து சமூகத்தவராக இருந்தும், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஆளுங்கட்சியினராக இருந்தும்,

12 மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால்…

இந்தியாவில் பல்வேறு கலவரங்களின் மூலம் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நிலையில், இங்கு முஸ்லிம்களின் வாழ்வுரிமை மறுக்கப்பட்டு வருகிறது.

குற்றவாளிகள் கவுரவிக்கப்படுகின்றனர்.

எதிர்காலத்திலாவது முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம் கிடைக்குமா? என ஏங்கித் தவிக்கும் நிலையில் உள்ளனர், முஸ்லிம்கள்.

மதக்கலவரங்களைத் தடுக்கும் முகமாக ஒரு சட்டம் இயற்ற மத்திய அரசு முயன்றாலும், இங்குள்ள ஜெயலலிதா உள்ளிட்ட ‘சங்பரிவார் சக்திகள்’ அதற்கும் முட்டுக்கட்டை போட்டு விட்டனர்.

வாழ்க இந்தியா !

பதிவு@ இஸ்லாமியர்களின் ஊடகத்துறை

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-