அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஆலந்தூர்,


பலத்த மழையால் சென்னை விமான நிலையத்துக்கு ரூ.66½ கோடி இழப்பு ஏற்பட்டதாக விமான நிலைய இயக்குனர் தெரிவித்தார்.விமான சேவை பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 1–ந் தேதி பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுபாதையில் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் புகுந்ததால் 1–ந் தேதி முதல் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 5–ந் தேதி வரை விமான நிலையம் மூடப்பட்டது.

மழைநீர் வடிந்த பின்னர் 6–ந் தேதி உள்நாட்டு விமான சேவையும், 7–ந் தேதி பன்னாட்டு விமான சேவையும் தொடங்கப்பட்டது. இதில் அதிநவீன ரேடார் கருவிகளும் பழுதடைந்தன. விமான நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, சேத மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன.

இந்த நிலையில் சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் தீபக் சாஸ்திரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–ரூ.66½ கோடி இழப்பு

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பினால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு, விமான நிலையமும் மூடப்பட்டது. மழை வெள்ளத்தால் பெரும் அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. தொழில்நுட்ப பொருட்கள், கருவிகள் உள்பட பல்வேறு பகுதிகள் மிகுந்த சேதம் அடைந்தன. இதன் மூலம் ரூ.31 கோடியே 6 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் விமான நிலையம் மூடப்பட்டதால் விமான போக்குவரத்து மற்றும் நிறுவனங்கள் மூலம் வரவேண்டிய வருவாய் ரூ.35 கோடியே 50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-