அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, கடந்த 6 மாதங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள மாவட்டத் தொழில் மையக் கட்டடத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட தொழில் மைய அலுவலகம், அரியலூரில் இயங்கி வந்தது. இந்நிலையில், இந்த அலுவலகம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நான்கு சாலை செல்லும் வழியில் கே.ஜி.எம். நகருக்கு கடந்த 22.5.2012 ஆம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் அலுவலகங்களுக்கு நவீன வதிகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாவட்டத் தொழில் மையம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து,கடந்த 20.2.2013 ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் தலைமைச் செயலகத்திலிருந்து சொந்தக் கட்டடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

இக்கட்டடத்தில் 50 பேர் அமரும் அளவில் கூட்ட அரங்கம், பொது மேலாளர் அறை, படிப்பகம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி அறை, கணினி அறை மற்றும் அலுவலக அறை, மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம் உள்பட நவீன அறைகள் இடம்பெற்றுள்ளன.

கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு சுமார் 6 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரையில் திறக்கப்படாமல் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலக கட்டடத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-