அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 


UAE celebrate National day today
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய நாள் கொண்டாட்டம் இன்று (02-12-2015) அமீரகமெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவை தன் கைப்பிடியில் வைத்திருந்த காலக்கட்டத்தில் அமீரக்த்தையும் ஆண்டு கொண்டிருந்தது பிரிட்டன்.
இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்த பின்பும் வளைகுடாவின் பல்வேறு பகுதிகள் பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாடுகளில் இருந்து பின்வாங்கப் போவதாக பிரிட்டிஷ் பிரதமர் ஹெரால்டு வில்சன் 1968ம் ஆண்டு அறிவித்தார்.


 அது ஒட்டு மொத்த வளைகுடா பகுதிகளையும் ஆனந்தத்தில் மூழ்கடித்தது. தற்போதைய அமீரகங்கள் அந்தக் காலக்கட்டதில் ஒருங்கிணைந்து இருக்கவில்லை. அபுதாபி, துபாய், சார்ஜா, புஜைரா, அஜ்மான், உம்முல்குவைன் மற்றும் ராஸ் அல் கைமா ஆகியவை தனித்தனியாகவே இருந்தன. 

அப்போது அபுதாயியை ஆண்டுக் கொண்டிருந்த மன்னர் ஷேக் ஜாயித் அவர்களின் முயற்சியால்தான் ஐக்கிய அரபு அமீரகம் தோன்றியது.. இந்த ஒருங்கிணைப்பிற்காக ஷேக் ஜாயித் கடுமையாக உழைத்தார். அவரது உழைப்பிற்கும் கருத்திற்கும் இணைந்து செயல்பட்டவர் அப்போதைய துபை மன்னர் ஷேக் ராஸித் பின் சயீத் அவர்கள். கூட்டமைப்பின் முக்கியத்துவம் குறித்து மிக எளிமையாக ஷேக் சய்யித் விளக்கினார்:


"நமது உறவுகளை ஊக்குவிக்க வேண்டுமென்ற அக்கறை, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் என்ற மிகச் சிறந்த எண்ணமும் தான் ஒரே தலைமைக்கு கீழ் நிற்க வேண்டும் என்ற சிந்தனைக்கு நம்மை அழைத்துச் சென்றுள்ளது. இதுவே நம் கூட்டமைப்பின் தொடக்கம்".
நாட்டைவிட்டுச் சென்றாலும் இரு நாடுகளும் நட்புடன் நடந்து கொள்ளலாம் என்ற ஒப்பந்தத்தில் ஷேக் ஜாயிதும் பிரிட்டிஷ் பிரதிநிதி ஜியோபி ஆர்தரும் கையெழுத்திட்டனர்.
1971 டிசம்பர் 2 ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்டது. அது வரையிலும் சிதறிக்கிடந்த ஆறு அமீரகங்கள் ஒரே கொடியின்கீழ் அணிவகுத்து நின்றன. அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் கைவான், புஜைரா ஆகிய நாடுகள் தான் முதல் கட்டத்தில் ஒருங்கிணைந்தன. அடுத்த ஆண்டு தான் ராஸ் அல் கைமா, ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுப்பு நாடாக மாறியது.


ஐக்கிய அரபு அமீரகம் பொது விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட ஏழு நாடுகளும் கூட்டாக தீர்மானம் மேற்கொண்டன. ஒருங்கிணைந்த அமீரகத்தின் வளர்ச்சி 1971 லிருந்து வெற்றிநடை போடத்துவங்கியது. ஐக்கிய அரபு அமீரகம் உருவாக்கப்பட்ட தினம் தேசிய நாளாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.


நன்றி  :(வி.களத்தூர் ஷா 
வி.களத்தூர் M.கமால் பாஷா!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-