அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் டேங்கர் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியை சேர்ந்த சையத்ஆதாம் என்பவர் இன்று தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் புதுக்கோட்டையை நோக்கி காரில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே துறைமங்கலம் மூன்று ரோடு ஏரிக்கரை பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, காரின் முன்னே சென்று கொண்டிருந்த கேஸ் டேங்கர் லாரி திடீரென சாலையின் நடுவே உள்ள பிரிவில் திடீரென திரும்பியுள்ளது. இதனை
சற்றும் எதிர்பாராத சையத்ஆதாம் ஓட்டிச்சென்ற கார் டேங்கர் லாரியின் பக்க வாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த குழந்தைகள் ஷாஹீத்(6), ஆசிஹா(4), மற்றும் சையத்ஆதாம்(35), ரேஷ்மாபாத்திமா(26) காயமடைந்த நான்கு பேரையும் பெரம்பலூர்அரசு மருத்துமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-