அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

திருவனந்தபுரம்,


சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற கேரளாவைச்சேர்ந்த 3 பேரை அவரது முதலாளி தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


வடக்கு கேரளாவில் உள்ள ஹரிபாத் நகரை சேர்ந்த நபர், தனது குடும்ப உறுப்பினர்களிடம் உதவுமாறு கூறி இந்த வீடியோ பதிவை அனுப்பியுள்ளார். அதில், மரத்தால் செய்யப்பட்ட ஒரு கட்டையைக்கொண்டு கேரளாவை சேர்ந்த 3 நபர்களையும் சவூதி அரேபியாவைச்சேர்ந்த அவர்களது உரிமையாளர் ஓட ஓட விரட்டி அடிக்கிறார். பார்ப்பவர்களை பதறச்செய்யும் இந்த வீடியோவில் உள்ள நபர்கள் மூன்று பேரும் எலக்ட்ரிசீயன் வேலைக்காக சவூதி அரேபியாவிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். ஆனால், சவூதி அரேபியாவின் அபா நகருக்கு அழைத்துச்செல்லப்பட்ட 3 பேரும், அங்குள்ள ஒரு செங்கல் சூளையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி கருத்து கூறியுள்ள கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி, சவூதிய அரேபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் மாநில அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் அவரை இந்தியா மீட்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-