அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


புதுடெல்லி, டிச. 29-


உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த குமார் ஆகாஷ் என்பவர் தான் சவுதியில் 28 மாதங்களாக சம்பளம் தரப்படாமல் கொடுமைப்படுத்தப்படுவதாக வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.


 குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “மும்பை ஏஜெண்ட் ஒருவர் சவுதியில் மெக்கானிக் வேலை வாங்கி தருவதாக கூறினார். ஆனால் சவுதியில் மெக்கா அருகில் ஒரு செங்கல் சூளையில் வேலைக்கு சேர்த்துவிட்டுவிட்டார்.

கடந்த 28 மாதங்களாக இங்கு கடுமையாக வேலை செய்துவருகிறேன். ஆனால் எனக்கு சம்பளம் கொடுக்காமல், இந்தியாவிற்கு திருப்பி அனுப்பாமல் கொடுமைப்படுத்துகிறார்கள். என்னை உடனடியாக காப்பாற்றுங்கள்” என்று பிரதமர் மோடிக்கும், வெளிவுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ்-க்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், வெளிவுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி பதிவிட்டுள்ளார். அதில்,  குமார் சவுதியில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மீட்க நடவடிக்கை எடுப்பதாக சுஷ்மா தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-