அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கோப்புப்படம்.
புலந்த்சகர், டிச.7-

ஆடு மாடுகள் மீது காட்டும் கருணையைக் கூட பெண்கள் மீது காட்டாத மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பிறந்து 28 நாட்களே ஆன குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிப் நக்லா என்ற கிராமத்தைச் சேர்ந்த அந்த குழந்தையின் பெற்றோர், நேற்று முன் தினம் பஞ்சாயத்து தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்றிருந்த போது இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது. ரத்தம் நிற்காமல் வெளியேறி வந்த நிலையில் நேற்று அந்த குழந்தை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட எஸ்.பி பங்கஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அதே கிராமத்தைச் சேர்ந்த நமினோ(25) என்ற கொடூரன் மீது அந்தக் குழந்தையின் தந்தை புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-