அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, வரும் 23ம் தேதி மீலாதுநபியை முன்னிட்டு அரசு விடுமுறை விடப்படுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழக அரசின் தலைமை ஹாஜி அரசுக்கு எழுதிய கடிதத்தில், பிறை தெரிந்ததற்கு ஏற்ப மிலாடி நபி 24ம் தேதி கொண்டாடப்படவேண்டும். எனவே, 24ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று வரும் 24ம் தேதி மீலாதுநபியை முன்னிட்டு அரசு விடுமுறை விடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது  


4 நாட்கள் தொடர் விடுமுறை!

அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 4 நாள்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. 25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கிறிஸ்துமஸும், 26, 27 ஆகிய நாள்கள் சனி, ஞாயிறு என்பதால் மொத்தம் 4 நாள்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும்.
 வங்கிகளுக்கும் விடுமுறை: ஒவ்வொரு மாதமும் 2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறையாகும். மேலும், அரசு விடுமுறை வங்கிகளுக்கும் பொருந்தும்.
 எனவே, வங்கிகளுக்கும் 4 நாள்கள் விடுமுறை விடப்படுகிறது. ஆகவே, இந்த வாரமே வங்கிகள், ஏ.டி.எம்.-களில் இருந்து தேவையான பணத்தை எடுத்து வைத்துக் கொள்வது நல்லது என்று வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-