அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
2015-ம் ஆண்டில் கூகுள் இணையதளத்தில் அதிக நபர்களால் தேடப்பட்ட வெப்சைட்கள், தேடப்பட்ட நபர்கள், தேடப்பட்ட சம்பவங்கள் ஆகியவற்றைப் பற்றிய உலகளாவிய பட்டியலை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.

கடந்த ஆண்டு வெளிவந்த பட்டியலில் முதலிடம் பிடித்த பாலிவுட் மற்றும் கிரிக்கெட் சார்ந்த விஷயங்களே இந்த வருடமும் இடம் பெற்றிருந்தாலும், சிற்சில மாற்றங்களும் இருக்கவே செய்கின்றன.

அதிக நபர்களால் தேடப்பட்ட வெப்சைட்களின் பட்டியலில் ஃப்லிப்கார்ட் , IRCTC , SBI ஆகியவை முன்னிலையில் உள்ளன. அதிகமானோரால் தேடப்பட்டவர்களின் பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடிக்கிறார். மோடிக்கு பத்தாவது இடம். மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பெயர் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்திலும், முதல் பத்து ட்ரென்டிங் தேடல்களின் பட்டியலில் ஆறாவது இடத்திலும் உள்ளது.

அதிகம் தேடப்பட்ட சினிமாக்களின் பட்டியலில் முதல் இடத்தில் 'பாகுபலி'யும் இரண்டாம் இடத்தில் 'பஜ்ரங்கி பைஜான்' படமும் உள்ளன. ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'ஐ'–க்கு இந்த பட்டியலில் ஐந்தாவது இடமும், விஜய் நடித்த 'புலி'-க்கு ஏழாவது இடமும் கிடைத்துள்ளது.

கூகுள் வெளியிட்டுள்ள பட்டியல் விவரம் வருமாறு:

டாப் தேடல்கள் :

1. ஃப்லிப்கார்ட்
2. IRCTC
3. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
4. அமேசான்
5. ஸ்னாப்டீல்
6. இந்தியன் ரயில்வேஸ்
7. HDFC பேங்க்
8. Cricbuzz
9. வாட்ஸ்அப்
10. Paytm

டாப் ட்ரென்டிங் தேடல்கள் :

1. ICC கிரிக்கெட் உலக கோப்பை 2015
2. பாகுபலி
3. பஜ்ரங்கி பைஜான்
4. பிரேம் ரத்தன் தன் பயோ
5. இந்தியன் பிரீமியர் லீக்
6. ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
7. SSC எக்ஸாம்
8. பிக் பாஸ் 9
9. ஹாட்ஸ்டார்
10. ஸ்டார்ஸ்போர்ட்ஸ்

டாப் ட்ரென்டிங் படங்கள் :

1. பாகுபலி
2. பஜ்ரங்கி பைஜான்
3. பிரேம் ரத்தன் தன் பயோ
4. ABCD 2
5. ஐ
6. பி.கே.
7. புலி
8. ராய்
9. ஹமாரி அதூரி கஹானி
10. ஸ்ரீமந்துடு

அதிகம் தேடப்பட்ட நபர்கள் :

1. சன்னி லியோன்
2. சல்மான் கான்
3. ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
4. கத்ரீனா கைஃப்
5. தீபிகா படுகோன்
6. ஷாரூக்கான்
7. யோ யோ ஹனி சிங்
8. காஜல் அகர்வால்
9. அலியா பட்
10. நரேந்திர மோடி

ஸ்ரீ.தனஞ்ஜெயன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-