அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


புதுடெல்லி: 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை வரும் ஜூன் 30ம் தேதி வரை மாற்றலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கருப்பு பணப்புழக்கத்தை தடுக்கவும், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காகவும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, 2005ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இனி செல்லுபடியாகாது. எனவே இந்த நோட்டுகளை வைத்திருப்போர் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்தது. இதற்கான காலக்கெடுவாக 2015, ஜனவரி 1ம் தேதி என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அந்த காலக்கெடு அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ரூபாய் நோட்டின பின்பகுதியின் கீழ் அந்த நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு சிறிய எழுத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

அப்படி குறிக்கப்படவில்லை எனில் அது 2005ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட நோட்டு ஆகும். இதன்மூலம் ரூபாய் நோட்டுகளை எளிதில் அடையாளம் காணமுடியும்.இந்நிலையில், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கூறுகையில், 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளும் காலம், ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் போலி நோட்டுகள் ஊடுருவுவது தடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் பின்பற்றப்படும் நடைமுறை தான். இதற்கு முன்னரும் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த வாய்ப்பை அனைத்து வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி கேட்டு கொண்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-