அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
அமெரிக்காவில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தின் முன்னிலையில் சிறுநீர் கழித்த இரண்டு பெண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் வசித்து வரும் ஈரானை சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த தம்பதியினர் தங்கள் இரு குழந்தைகளுடன் கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது, குடித்துவிட்டு வந்த Natalie Richardson(32), Claire Farrell(36) ஆகிய இருபெண்கள், தங்களது இனவெறியை காட்டும் விதமாக அவர்கள் முன்னிலையில் வேண்டுமென்றே சிறுநீர் கழித்து பிரச்சனை செய்துள்ளனர்.


இந்த சம்பவத்தால் வருத்தமடைந்த இஸ்லாமிய குடும்பத்தினர் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.


தற்போது இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று, Plymouth Crown நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


அப்போது, இருவரின் செயல்களும் அருவருக்கத்தக்க ஒன்றாகும் எனவே இவர்கள் இருவருக்கும் தண்டனை அளிக்க வேண்டியது அவசியமாகும் என்று கூறிய நீதிபதி இருவருக்கும் சிறைதண்டனை விதித்துள்ளார்.


ஆனால், Richardson தான் செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட நிலையில், Farrell தான் அவ்வாறு ஒரு தவறை செய்யவில்லை என்று குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-