அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

புதுடெல்லி,

வெள்ள சேதம் காரணமாக தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கான தடை 18-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சுங்க கட்டணம் ரத்து

தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளம் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடி மையங்களில் 11-ந் தேதி வரை கட்டணம் வசூலிப்பதை நிறுத்திவைக்க மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி 3-ந் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.

பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் விதமாக மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு முகமைகள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை எளிமையாக்கும் விதமாக தமிழக சுங்கசாவடி மையங்களில் கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தடை நீட்டிப்பு

இந்த தடை நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி மேலும் ஒருவார காலத்திற்கு அதாவது வருகிற 18-ந் தேதி வரை தமிழக சுங்க சாவடிகளில், சுங்க கட்டணம் வசூலிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூ லிக்கப்பட மாட்டாது.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் இதற்கான அறிவிப்பை மத்திய போக்கு வரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று வெளியிட்டார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-