அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 

பெரம்பலூர்,: பெரம்பலூர் பாலக்கரையில் ரூ1.30கோடியில் பாலம் விரிவாக் கம் மற்றும் கட்டுமானப்பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பாகத் தொடங்கியது. 2 மாதத்தில் முடிவடையுமென கோட்டப்பொறியாளர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். பெரம்பலூர் பாலக்கரையில் தனலட்சுமி சீனிவாசன் நட்சத்திர ஹோட்டல் வடக்கு நுழைவுவாயில் முன்பு கடந்த 2008ம் ஆண்டு ரூ40லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட் டது. 24மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலத்தில் கழிவுநீர் மழைநீர் செல்ல ஏதுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலத்தின் வடக்குப்பகுதியை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கியது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையின் பெரம்பலூர் கோட்டப்பொறியாளர் கிருஷ்ணசாமி தெரிவித்ததாவது : பெரம்பலூர் நகரில் போக்குவரத்து வசதிக்காக பாலக்கரையிலுள்ள பாலத்தின் வடக்குப்பகுதி விரிவுபடுத்தப்படுகிறது. இதன் காரணமாக ஏற்கனவே 24மீட்டர் நீளமுள்ள பாலத்தில் 12 மீட்டர் கூடுதலாக பாலம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இப்பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பாக ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் அமைப்பதற்காக பாலத்தோடு முன்புறமும் பின்புறமும் இணைந்துள்ள வடபுறசாலையும் அரை கி.மீ. நீளத்திற்கு அகலப்படுத்தப்பட உள்ளது. மேலும் பாலக்கரை ரவுண்டானாவுக்கும் கிழக்கேயுள்ள மயானத்திற்கும் இடையே செல்லும் கழிவுநீர் வாய்க்காலுக்கான பாலம் ரூ.50லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப் படவுள்ளது. இதன்படி பாலக்கரையில் மட்டும் ரூ.1.30கோடி மதிப்பீட்டில் 2 பாலங்களுக்கான விரிவாக்கம் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ளது. இந்தப்பணிகள் 2 மாதத்தில் செய்து முடித்திடத் திட்டமிடப்பட்டு துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு எந்தப்பாதிப்புகளும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-