அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 
பெரம்பலூரை சேர்ந்தவர் அப்துல் ஜபார் மனைவி ஹைருன்னிசா, இவர்களது மகன் அப்துல் கரீம், அப்துல் மஜிலத் மனைவி ஆமீனாபீ, அக்பர் அலி மனைவி மைமூனாபீ ஆகிய நான்கு பேரும் ஹஜ் புனிதப் பயணம் செல்ல முடிவெடுத்தனர். இதற்காக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரே டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பச்சையம்மன் நகரைச் சேர்ந்த முகமது அலி மகன் முகமது யாசினிடம் (38), ரூ. 11.40 லட்சத்தை வங்கி மூலமாகவும், நேரடியாகவும் செலுத்தினார்களாம். ஆனால், மேற்கண்ட நபர்களை ஹஜ் பயணத்துக்கு அனுப்பவில்லையாம். இதனால் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்கு முகமது யாசின் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட குற்றப் பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், முகமது யாசினை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-