அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

No toll collection in TN till Dec 11புதுடெல்லி,தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டது.
கனமழை மற்றும் வெள்ளத்தினால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்லவும் முயற்சி செய்து வருகின்றனர். மத்திய அரசு தொடந்து உதவியை செய்து வருகிறது. மத்திய அரசு நிறுவனம் பி.எஸ்.என்.எல். ஒரு வாரத்திற்கு இலவசமான சேவையை சென்னையில் வழங்குகிறது.
இந்நிலையில், தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் வருகிற 11-ம் தேதிவரையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். மத்திய, மாநில அரசின் பல்வேறு முகமைகள் எளிதான முறையில் நிவாரண மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு ஏதுவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சற்று முன்பு வரை, பல்வேறு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதாக பலர் சமூக வலைதளங்களில் ரசீதுடன் புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-