அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை சவுதி அரேபியா கட்டி வருகிறது. துபாயில் புர்ஜ்கலியா என்ற கட்டிடம் உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக உள்ளது. இது 2700 அடி உயரம் கொண்டது. ஆனால் அதை மிஞ்சும் வகையில் மிக உயரமான கட்டிடத்தை கட்ட சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. 3280 அடி ( ஒரு கிலோ மீட்டர் ) உயரத்தில் 200 மாடிகள் கட்டப்படுகிறது.

இது துபாயில் கட்டப்பட்டுள்ள புர்ஜ் கலிபாவைவிட 550 அடி உயரமாகும். அதே நேரத்தில் அமெரிக்காவில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 2 மடங்கு உயரமாகும்.

இக்கட்டிடம் செங்கடல் துறைமுக நகரமான ஜிட்டாவில் கட்டப்பட்டு வருகிறது. ரூ.7920 கோடி செலவில் கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 26 மாடிகள் கட்டப்பட்டுள்ளது.

அதன் கட்டுமான வேலைகள் வருகிற 2020–ம் ஆண்டில் முடிந்து திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகவலை சவுதி அரேபியா மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.

உலகிலேயே 4 மிக உயரமான கட்டிடங்கள் என புர்ஜ் கலியா (துபாய்), தைபே (தைவான்), பெட்ரோனாஸ் டவர் (கோலாலம்பூர்), சியர்டவர் (சிகாகோ) போன்றவை மிகஉயரமான கட்டிடங்களாகும்.

தற்போது சவுதி அரேபியாவில் கட்டப்படும் இக்கட்டிடம் 5–வது மிக உயரமான கட்டிடமாகும்.

Image Credit: CNN
நன்றி: மாலை மலர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-