அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவூதி புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆரோக்ய சாமி பீட்டர் (வயது60) கடந்த 18மாதங்களாக வேலையில்லாமலும் காலாவதியான தனது அடையாள அட்டை எனப்படும் இகாமாவை உரியவர்கள் புதுப்பிக்காமலும் இருந்ததால் வெளியில் நடமாட முடியாமலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான ஆரோக்யசாமி நாடி திரும்பமுடியாமல் தவித்துள்ளார். முறைப்படியான விசா இல்லாமல் 18மாதங்களாக தனது இகாமாவை புதுப்பிக்க முயற்சி செய்தும் ஆரோக்ய சாமி தாயகம் திரும்புவதற்கு அவரால் முடியாமல் போகவே இந்தியன் சோஷியல் ஃபோரம் என்ற சமூக நல அமைப்பின் உதவியை நாடினார்.

இதையறிந்த இந்தியன் சோஷியல் ஃபோரம் கோபார் கிளை சமூக நலத்துறை நிர்வாகிகள் அவரது பிரச்சினையை கவனத்தில் கொண்டு உடனடியாக சவூதி அரசின் காவல்துறை மற்றும் இந்திய தூதரகத்தின் உதவியையும் பெற்று பாதுகாப்பாக தாயகத்திற்கு அனுப்பி வைக்கும்
முயற்சியில் ஈடுபட்டனர். கோபர் கிளையின் நிர்வாகி .அப்துல் காதர் கடந்த 10.12.2015 அன்று ஆரோக்ய சாமிக்கான முறைப்படியான EXIT வெளியேற்றம் ஆணையை சவூதி அரசின் மூலம் பெற்று ஆரோக்யசாமியை பாதுகாப்பாக புதுக்கோட்டைக்கு வழியனுப்பி வைத்தார். இந்தியன் சோஷியல் ஃபோரம் கோபர் கிளை நிர்வாகிகளின் மனிதநேய சேவையை தேசிய துணைதலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி,மாநில தலைவர் காயல் க்அபுபக்கர், பொதுசெயலாளர் காயல் மக்தூம் நைனா ஆகியோர் பாராட்டினர்.-  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-