அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...புதுடெல்லி, டிச.5-

தொடர் கன மழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை விமான நிலையம் நாளை முதல் பகுதி நேரமாக செயல்படும் என இந்திய விமான ஆணையம் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத தொடர் கனமழையால், அண்மையில் சென்னை விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான நிலையமும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளநீர் வடிந்துள்ளதால் நாளை முதல் பகுதி நேரமாக சென்னை விமான நிலையம் செயல்படும் என்றும் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்படும் என்றும் இந்திய விமான நிலையத் தலைவர் ஆர்.கே.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விமான நிலையம் காலை 6 மணி முதல் இயற்கை வெளிச்சம் இருக்கும் வரை இயங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-