அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...உலகில் உள்ள பல பணக்காரர்களுக்கு தங்களிடம் இருக்கும் பணத்தை எப்படி செலவு செய்வதென தெரியவில்லை போலும். அவர்களுக்காகவே பல லக்ஸரி விஷங்களை உருவாக்ப்பட்டுள்ளன… மொபைல்கள், கார்கள், வீடுகள், விமானங்கள் என சாதாரண பணக்காரர்கள் கூட வாங்க முடியாத அளவு மில்லியன்கள் கொட்டி செலவு செய்வதற்கென உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படித்தான் இந்த விமான பயணமும்.


Etihad Airbus A380


ஐக்கிய அரபு ராச்சியத்தின் எடிஹாட் விமானம் தான் உலகின் அதிகூடிய சொகுசு விமானமாகவும், உயர்ந்த விலை கொண்ட பர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட்டையும் உலகிற்கு வழங்குகிறது. சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே பறக்கும் இவ் விமானத்தில் மொத்தம் 600 சீட்கள் உள்ளன.ஆனால் பர்ஸ்ட் க்ளாஸ் ஒருவருக்கு மட்டுமே!


அந்த ஒருவருக்கு கிடைக்கும் வசதிகள் என்ன என்ன தெரியுமோ..?? தொடர்ந்து படியுங்கள்…


முதல் வகுப்பில் பயணம் செய்பவருக்கு விமானத்தின் ஒரு துளி சத்தம் கூட உள்ளே நுளையாதாம்.


ஆகாயத்தில் இருக்கிறோமா.. வீட்டில் இருக்கிறோமா என்ற குழப்பமே வந்துவிடுமாம்.. !


ஒரு அழகான ஹால். அங்கே மிக வசதியான ஒரு சோஃபா செட்.. அதன் அருகே ஒரு குளிர்சாதப்பெட்டி.. அதன் உள் உலகின் மிக முக்கிய ‘மதுபானம்’ எல்லாம் உள்ளடக்கியிருக்குமாம்.


அதில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்லலாமாம். அதை தாண்டி உள்ளே சென்றால் உங்களுக்குரிய பெட் ரூம் காத்திருக்கும்.


இரண்டு பேர் தூங்கக்கூடிய அளவிற்கு பெர்ர்ர்ர்ரிய கட்டில் ஒன்றும்.. அதன் அருகில் 27 இஞ்ச் தொலைக்காட்சி பெட்டி ஒன்றும் உள்ளதாம். எந்த வித அலுங்கல் குலுங்கலும் இல்லாமல்.. சத்தம் கூட இல்லாமல் நிம்மதியாக ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்துகொள்ளலாமாம். தொடர்ந்து குளியலறை…!!
பொதுவாக விமான பயணத்தின் போது குளியலறையில் க்யூவில் நிற்க வேண்டிய தேவை ஏற்படும். ஆனால் இங்கே அந்த கதை இல்லை. உங்களுக்கே உங்களுக்கு என ஒரு தனி பாத்ரூம். இங்கே நீங்கள் ஆகாய குளியல்.. ஆனந்த குளியல் போடலாம். மேலும் பல பாத்ரூம் வசதிகளை கொண்டிருக்கிறதாம் இது.


இவை அனைத்தையும் நீங்கள் உங்கள் சொந்த வீடு போல் பயன் படுத்திக்கொள்ளலாம். நீங்கள் உள்ளே நுளையும் போது உங்கள் இடம் மிக புதிதாக இருக்குமாம். இதற்கு முதல் பயன் படுத்தியவுடன் பெட்ஷீட் தலயணை போன்றவற்றை அடியோடு மாற்றிவிடுவார்களாம்.


இதில் நீங்கள் பயணம் போக வெறுமனே 40 ஆயிரம் அமெரிக்க டாலகளை கொடுத்தால் போதுமானது. அதாவது இலங்கைப் பெறுமதியின் படி 5614894.07 ரூபாயாம்.

இந்தியா 30 லட்சம்
 இது எவ்ளோன்னு நீங்களே எண்ணிக்கோங்க…!! என்ன பயணத்துக்கு ரெடியா….??

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-