அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

இந்திய சினிமாத்துறையில் நம்பர் 1 ஆக இருக்கும் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினி காந்த் அவர்களுக்கு இறைவனின் வேதமான திருக்குர்ஆன் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.


குரான் வாசித்த நடிகர் ரஜினி காந்த்
2013 ஆம் ஆண்டு என்னுடன் ஹஜ் வந்த அருமை நண்பர் உஸ்தாத் இசத் அவர்கள் கபாலி படப்பிடிப்பிற்கு சென்ற ரஜினி காந்த் அவர்களுக்கு நேரில் சந்தித்து தமிழ் மொழிப்பெயர்ப்பு குரான் கொடுத்துள்ளார்.

மற்றும்
2014 ஆம் ஆண்டு நான் மலேசியா சென்றபோது உஸ்தாத் அவர்களும் நானும் சந்தித்து பேசிக்கொண்ட போது எடுத்த புகைப்படங்கள்.இறைவனின் வேதமான திருக்குர்ஆனை படிக்க தொடங்கி விட்டார் ஆன்மீகவாதியான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள்,


இந்திய சுதந்திர போராட்ட மாவீரன் திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினி காந்த் நடிக்கக்கூடாது என்று பாஜக, இந்துத்துவ அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் ரஜினி காந்த் அவர்கள் திருக்குர்ஆன் படிக்க தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கிறது.

கோவை கலவரத்தின் போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் திரு.ரஜினி காந்த் அவர்கள், எனது இஸ்லாமிய உறவுகள் என்று மனதார பேசினார்.

உலக சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்ஸன், கேட் ஸ்டீவன்ஸ், கேசியஸ் கிளே, லாரன் பூத் ஆகிய உலக பிரபலங்களை ஈர்த்த திருக்குர்ஆன் இப்போதும் திரு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் கைகளில் தவழ்கிறது.

இறைவன் திரு.ரஜினி காந்த் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் என்றென்றும் நல்வாழ்வை ஏற்படுத்துவானாக....

ஜசாக்கல்லாஹு ஹைரன் : எடிட்டர் அலாவுதீன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-