அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...முஸ்லிம்களுக்கு இந்த அரசு உரிமையை வழங்கியுள்ளதா ?

இந்திய பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன நினைவு நாள் சிறப்பு விவாதத்தில் கலந்து கொண்ட மஜ்லீஸ் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அசத்துத்தின் உவைஸி அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில்....

இந்திய அரசியல் சாசனம் முஸ்லிம்கள் உட்பட அனைவருக்கும் சமவாய்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த அரசு அரசியல் சாசனத்தை மதிக்கும் அரசாக இருப்பது உண்மை என்றால் அரசியல் சாசனம் எந்த உரிமைகளை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளதோ அந்த உரிமைகள் முஸ்லிம்களுக்கு சென்றடைவதை இந்த அரசு உறுதி செய்தாக வேண்டும்.


அரசியல் சாசனப்படி இந்தியாவின் பிரதமர் என்பவர் அனைத்து மத்ததவருக்கும் அனைத்து சமூகத்தவருக்கும் பிரதமராக இருக்கவேண்டும்.

முஸ்லிம்களுக்கு மோடி பிரதமராக இருக்கிறாரா ? என அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்று அசத்துத்தின் உவைசி குறிப்பி்ட்டார்.

இன்று நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழலை இந்த அவையில் இருக்கும் யாரும் மறுக்க முடியாது.

முஸ்லிம்களுக்கு எதிராக சில அமைச்சர்களே வன்முறைகளை வெளிப்படுத்தும் போது மோடி இந்தியாவின் பிரதமராக நடந்து கொள்கிறாரா ? எனவும் பாஜக கூட்டத்தின் நடுவே அசத்துத்தீன் உவைஸி கேள்விக்கணைகளை தொடுத்தார்.

நன்றி : Tamil Muslim Media

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-