அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...முதல் சம்பவத்தில் அந்த நடிகர் ஒரு படம் எடுக்கிறார். அதில் குறிப்பிட்ட ஒரு மதத்தவரின் மனம் புண் படுமாறு ஒரு பகுதியை வைக்கிறார். அதை கண்டித்து அந்த மதத்தினர் போராட்டம் நடத்துகிறார்கள். அவர் அந்த மதத்தின் தலைவர்களை படம் பார்க்க அழைக்கிறார். அவர்கள் பார்த்தாலும் அந்த வசனம் மாறி விடுமா என்ன..? அதன் பின்னும் அந்த மதத்தினர் அப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அதைப் பார்த்து அந்த நடிகர் இந்த நாட்டை விட்டே வெளியேறப் போகிறேன் என்று சொல்கிறார். இந்த மீடியா கதறுகிறது. முகநூலில் அத்தனை பேரும் கதறுகிறார்கள். நிறைய பேர் தங்கள் சொத்து பத்திரத்தை அந்த நடிகருக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்று ஒரு mass mind seduction நடந்தேறியது.

சரி. போகட்டும். அந்த குறிப்பிடட முஸ்லிம் மதத்தினரை தீவிரவாதிகள்தான் என்று வலுவுடன் நிறுவிய அந்த நடிகர் கமலஹாசன் அதன் பின்னர் ஆளும் கட்சி தலைமையுடன் ஒப்பந்தம் போட்டு அந்தப் படத்தை ரிலீஸ் செய்தார். முஸ்லிம்களை புண்படுத்தும் அந்தப் பகுதியோடுதான் அத்திரைப்படம் வெளி வந்தது. அவர் வியாபாரி. அப்படித்தான் செய்வார்.

ஆனால் இந்த மீடியாக்கள் என்ன செய்தன. கமல் நாட்டை விட்டுப் போகப் போகிறார் என்று கதறி அழுதன. விட்டிருந்தால் அவர் காலில் விழுந்து போகாதே போகாதே என் கணவா என்று கதறி இருப்பார்கள். அந்த சம்பவம் அப்படியாக முடிந்தது.

இரண்டாவது சம்பவம்..

அமீர்கான் ஒரு பேட்டியில் மத சகிப்பின்மை பற்றி பேசுகிறார். அக்லக் படுகொலையைத் தொடர்ந்து நாமும் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டி இருக்குமா என்று என் மனைவி என்னிடம் கேட்டார் என்று ஒரு வரிதான் சொல்கிறார்.
உடனே அமீர்கான் இந்தியாவை விட்டு வெளியேறப் போகிறார் என்று மீடியாக்கள் அனைத்தும் நெருப்பை அள்ளி அவர் மீது வீசுகின்றன.. இத்தனைக்கும் அவர் சொன்னது இந்த மாதிரி சம்பவங்கள் தொடருமானால் முஸ்லிம்களான நாமும் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டி வருமா என்று என் மனைவி கேட்டார் என்று மட்டும்தான்..

ஓர் இந்து நடிகர் தானாக நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன் என்று டிராமா போட்டால் அவர் காலில் விழுந்து இந்த மீடியா கதறும். ஆனால் அதே ஒரு முஸ்லிம் நடிகர் தன் மனைவி பேச்சு வாக்கில் இப்படி சொன்னார் என்று சொன்னாலே நீ முஸ்லிம்.. வேண்டுமென்றால் பாகிஸ்தானுக்குப் போ என்று தூசணம் செய்யும்..
இதில் அனுபம் கேர் போன்ற இந்துத்துவா அடியாட்களின் அட்ராசிட்டிகள் வேறு..

எனது ஒரே வருத்தம் என்னவென்றால் இந்த மீடியாக்கள் இப்படி பப்ளிக்காக இந்துத்துவாவுக்கு வக்காலத்து வாங்குவதை எத்தனை மக்கள் புரிந்திருக்கிறார்கள்.. இந்த இந்துத்துவா மீடியா அடியாட்களை தோலுரித்தல் நம் கடமை அல்லவா..?
அமீர்கான் விஷயத்தில் இந்த மீடியாக்களின் நிலைப்பாடு மிகவும் கேவலமானது. அட காசுக்கு மானத்தை விற்கும் நாய்களே (சின்னா என்னை கோபித்துக் கொள்ளாதே).. இவ்வளவு பச்சையாக, அசிங்கமாக நடந்து கொள்கிறீர்களே.. உங்களை யாரும் கவனிக்கவில்லை என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்...

நன்றி : நந்தன் ஸ்ரீதரன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-