அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

உலகையே 4 ஆயிரம் ஆண்டுகளாக வியப்பில் ஆழ்த்தி வரும் இறைவனின் நீரூற்று ஜம் ஜம் கிணறு,

ஏனென்றால் பாலைவன தேசமான சவூதி அரேபியாவில் புனித ஆலயமான மக்காவில் நபி இப்ராஹீம் அவர்களின் காலத்திலிருந்து ஜம் ஜம் நீர் வருகிறது.


ராட்சத மோட்டார் மூலம் ஒரு நாளைக்கு கோடான கோடி லிட்டர் தண்ணீர் எடுத்தும் 4 ஆயிரம் ஆண்டுகளாக தண்ணீர் வற்றவில்லை,

மேலும் ஜம் ஜம் தண்ணீரை இன்று எடுத்து 1000 ஆண்டுகள் கழித்து குடித்தாலும் கெட்டுப்போகாமல், கிருமி தொற்றாமலும், துருநாற்றம் வீசாமலும் அப்படியே இருப்பதை ஐரோப்பிய நாடுகள் பலமுறை ஆய்வு செய்து ஐரோப்பிய மேற்கத்திய உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள வரலாறு இருக்கிறது என்ற தகவலை கூறிக்கொண்டு பதிவின் நோக்கத்திற்கு வருகிறோம்.

ஜம் ஜம் தண்ணீரை பிடிப்பதற்கு லட்சோபலட்ச மக்கள் தினமும் அலை மோதுவதால் தனது வாகனத்தில் டேங் அமைத்து அதில் ஜம் ஜம் நீரை நிரப்பி மக்கா மாநகரில் ஒவ்வொரு வீதியிலும் ஒரு அரபி இலவசமாக விநியோகம் செய்து நெஞ்சை நெகிழ செய்து வருகிறார்.

அதை தான் படத்தில் காண்கிறீர்கள். அதுமட்டுமில்லாமல் தனது வாகனத்தில் அதிகமாக திருக்குர்ஆனை வைத்திருந்து பலருக்கு திருக்குர்ஆனை இலவசமாகவும் வழங்கி வருகிறார்.

மக்கா மாநகரில் கோடான கோடீஸ்வரர்கள் எல்லாம் உணவு, ஜூஸ் போன்ற பொருட்களை வாங்கியோ அல்லது வீட்டில் சமைத்தோ தாம் ஓர் சர்வ சாதாரண மனிதரை போல் சாலைகளில் ஆங்காங்கே நின்று மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்வார்கள்.

அப்படி நடைபெறும் ஆயிரக்கணக்கான நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவத்தில் இந்த சம்பவமும் ஒன்று...

மக்காவில் மக்கள் கடல் மட்டும் சங்கமம் ஆவதில்லை, மனிதநேயமும் சங்கமிக்கும் இடம் என்று சொல்லலாம் அல்லது மனிதநேயம் பிறந்த இடம் என்று சொல்லலாம்,

அந்த அளவிற்கு சகிப்புத்தன்மையையும், சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும், மனிதநேயத்தையும் கொட்டி கிடப்பதை காண முடியும். அப்படிப்பட்ட மனிதநேய சுவாசக்காற்றை உலகிலுள்ள ஒவ்வொரு மனிதரும் சுவாசிக்க வேண்டும்.

தகவல் உதவி : மக்காவிலிருந்து அப்துல் ஹக்கீம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-