அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சூரிஜ்: சுவிட்சர்லாந்தின் ‘டிசினோ’ மாகாணத்தில் முஸ்லிம் பெண்கள் ‘பர்தா’ அணிந்தால் ரூ.6½ லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் ‘பர்தா’ அணிய சுவிட்சர்லாந்தில் ‘டிசினோ’ மாகாணத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து 2013ம் ஆண்டு செப்டம்பரில் கருத்து ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில், மூன்றில் 2 மடங்கு பர்தா அணிய தடை விதிக்க வலியுறுத்தி இருந்தனர்.

அதைத்தொடர்ந்து தற்போது தன்னாட்சி அதிகாரம் பெற்ற டிசினோ பாராளுமன்றத்தில் அதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து டிசினோ பகுதியில் பொது இடங்களில் பெண்கள் முகத்தை மறைக்கும் வகையில் ‘பர்தா’ உடை அணிய தடைவிதிக்கப்பட்டது. மீறி அணிந்தால் ரூ.6½ லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சுற்றுலா பயணிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-