அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைக்கும் வகையில் புர்கா அணிய தடை விதித்துள்ள நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்தும் சேர்ந்துள்ளது. உலகை தீவிரவாதம் அச்சுறுத்தி வரும் நிலையில் முகத்தை மறைக்கும் வகையில் புர்கா அணிந்து தீவிரவாதிகள் சில இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சில நாடுகளில் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தும் புர்காவுக்கு தடை விதித்துள்ளது.சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்தில் இத்தாலி மொழி பேசும் மக்கள் வசிக்கும் டிசினோ மாநிலத்தில் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.பிரான்ஸ்2011ம் ஆண்டு பெண்கள் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிந்து வெளியே வர பிரான்ஸில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.


பெல்ஜியம்பிரான்ஸை அடுத்து பாதுகாப்பு காரணங்களை காட்டி புர்காவுக்கு தடை விதித்து 2011ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது பெல்ஜியம்.

நெதர்லாந்து


முகத்தை மறைக்கும்படி புர்கா அணிய 2007ம் ஆண்டே நெதர்லாந்து தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


ஸ்பெயின்


பொது இடங்களில் முகத்தை மறைக்கும்படி புர்கா உள்ளிட்ட ஆடைகள் அணிய ஸ்பெயினின் பார்சிலோனா உள்பட 12க்கும் மேற்பட்ட நகரங்களில் 2010ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.


இத்தாலி


பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிவது சட்டவிரோதமானது என்ற சட்டம் இத்தாலியில் 1970களில் இருந்து நடைமுறையில் உள்ளது.


ரஷ்யா


2013ம் ஆண்டு ரஷ்யாவின் ஸ்டாவ்ரோபோல் பகுதியில் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிய தடை விதிக்கப்பட்டது.


ஜெர்மனி


ஜெர்மனியில் பள்ளி ஆசிரியைகள் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிய தடை விதிக்கலாம் என்று 2003ம் ஆண்டு நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து 16 மாநில அரசுகள் முகத்தை மறைக்கும் புர்காவுக்கு தடை விதித்தன. மேலும் அரசு ஊழியைகள் ஸ்கார்ப், முகத்தை மறைக்கும் துணி அணிய 2011ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-