அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ரியாத்

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 50 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற சவுதி அரேபியா திட்டமிட்டு உள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த 2 பத்திரிகைகள் இத்தகவலை தெரிவித்து உள்ளன. இந்த செயல் ஜிகாதிகளுக்கும் அதே நேரம் நாட்டில் தாக்குதல் நடத்த திட்டமிடும் தீவிரவாதிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.

பயங்கரவாத குற்றங்களுக்கான மரண தண்டனை குற்றத்திற்காக தூக்கிலிட 50 பேர் காத்திருக்கிறார்கள். இந்த பயங்கரவாதத்தில் 100 பொது மக்கள் 71 பாதுகாப்புபடை வீரர்கள் பலியாகி உள்ளதாக ஒகஸ் பத்திரிகை தெரிவித்து உள்ளது.இதில் அல் கொய்த இயக்கத்தை சேர்ந்த சிலரும், அவாமியா இயக்கங்களை சேர்ந்தவர்கள் சிலரும் உள்ளதாக அந்த பத்திரிகை தெரிவித்து உள்ளது.இதில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தில் எண்ணெய் உற்பத்தி நகரமான ஷியா நகரில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் ஆவார்கள் எனவும் தெரிவித்து உள்ளது.

ஆனால் ரியாத் தூதரக அதிகாரிகள் கூறும் போது தங்கள் அரசு ஷியா நகரில் போராட்டத்தில் ஈடுபட்டு தண்டிக்கபட்டவர்களுக்கு மரண தண்டனை இல்லை என உறுததி அளித்துள்ளனர்.

அல் ரியாத் பத்திரிகை வெளியிட்டு உள்ள தகவலில் விரைவில் 52 பேர் மரணதண்டனை விதிக்கப்படுவர் கூறி உள்ளது.பின்னர் எந்த வித விளக்கம் கூறாமல் தன் இணையதளத்தில் இருந்து அந்த தகவலை நீக்கி விட்டது.

20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சவுதி அரேபியாவில் இந்த வருடம் 150 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றபட்டு உள்ளது. இதில் அதிகமானவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தலைவெட்டபட்டு உள்ளனர். எனசர்வதேச மன்னிப்புச் சபை இந்த மாதம் தெரிவித்து உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-