அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
படிக்கும் நமக்கே ஷாக் அடிக்கிறது. கடந்த மாதத்திற்கான மின் கட்டணம் 39 கோடி ரூபாய் என பில் வந்த வீட்டில் எப்படியிருக்கும்..?
ஜம்மு காஷ்மீரில், புரான்நகர் என்ற பகுதியில் வசிக்கும் ராம் க்ரிஷன் என்பவரின் வீட்டில்தான் இந்த ஷாக் அடித்திருக்கிறது. தங்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத மின் கட்டண ரசீதை பெற்றிருக்கும் ராம் க்ரிஷன் குடும்பத்தினர், "நாட்டின் மிகப் பெரிய பணக்காரருக்குக் கூட ஒரு மாத கரண்ட் பில் 39 கோடி ரூபாய் வராதே!" என நொந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மின் வாரியத்துறை அலுவலரிடம் புகார் அளித்தபோது, "மின் கட்டணத்தை கணக்கிடும் மென்பொருளில் ஏதேனும் தவறு நடந்திருக்கலாம். கூடிய விரைவில் இப்பிரச்னை சரி செய்யப்படும்" என கூறியுள்ளனர்.

இவ்வளவு பெரிய தொகை ஒரு மாதத்திற்கான மின் கட்டணம் என்பது சாத்தியமில்லை என்பதால் ராம் க்ரிஷன் வீட்டிற்கான மின் கட்டணம் சரி பார்க்கப்படவுள்ளது.

நா.மரகதமணி (மாணவ பத்திரிகையாளர்)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-