அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...நம் நாட்டிலேயே கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிகளவில் கடன் வாங்கியுள்ள மாநிலம் என்ற பெயரை தமிழகம் பெற்றுள்ளது. தமிழகத்தில் வாழும் ஒவ்வொருவர் மீதும் உள்ள கடன் அளவு 28,778 ரூபாயாக உள்ளது.

நாட்டில் அதிகளவில் கடன் வாங்கியுள்ள மாநிலம் குறித்து ரிசர்வ் வங்கியின் ஆவணங்களின் அடிப்படையில் இந்தியா ஸ்பென்ட் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது.

மகாராஷ்டிரா டாப்!


ஆய்வில் மிக அதிகளவில் கடன் வாங்கியுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரா, குஜராத், தமிழகம், கர்நாடகம், ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் உள்ளன. இதில் நாட்டிலேயே அதிகளவில் கடன் வைத்திருக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இந்த மாநிலத்தின் மொத்த கடன் ரூ. 3,38,730 கோடி.

முந்தும் தமிழகம்!

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் மிக வேகமாக மற்றும் மிக அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளதாக இந்தியா ஸ்பென்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலம் என்ற சாதனையை தமிழகம் விரைவில் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏனெனில் அதிக கடன் வாங்கிய மகாராஷ்டிரா மாநிலம் தனது வட்டியைக் குறைத்து வருகிறது. ஆனால், தமிழகம் கடனை வாங்கிக் குவித்து, அதிகளவில் வட்டியைக் கட்டி வருவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தின் கடன் அளவு 92 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனிநபர் கடன் - 28,778 ரூபாய்!

அதேப்போல, மக்கள் தொகை அடிப்படையில் மாநிலத்தில் ஒவ்வொருவர் மீதும் உள்ள கடன் அடிப்படையிலும் தமிழகத்தின் கடன் அதிகளவில் உள்ளது.

அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தின் மக்கள் தொகை 11.42 கோடி. தமிழகத்தில் 6.78 கோடி. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் உள்ள கடன் அளவு 28,778 ரூபாயாக உள்ளது. இதுவே மகாராஷ்டிராவில் 29,661 ரூபாயாக உள்ளதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளில் மாநில அரசுகளின் மொத்த கடன் சராசரியாக 66 சதவிகிதம் உயர்ந்து ரூ.27,33,630 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2010-ம் ஆண்டில் ரூ.16,48,650 கோடியாக இருந்ததாக இந்தியா ஸ்பென்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-