அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
கொல்கத்தா: இந்திய அளவில் உள்ள தீவிரவாத இயக்கங்களில் முதலிடத்தில் உள்ளது ஆர்.எஸ்.எஸ். தான் என்று மகாராஷ்டிராவின் முன்னாள் ஐ.ஜி., எஸ்.எம். முஷ்ரிப் கூறியிருப்பது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக முஷ்ரிப் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "இந்தியாவில் நடந்த கொடூரமான 13 பயங்கரவாத சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். , பஜ்ரங் தளம் போன்ற பிற இந்து மத அமைப்புகள் மீது மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய தீவிரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். என்பதில் எந்த ஒரு சந்தேகமும் தேவையில்லை.கடந்த 2007-ம் ஆண்டு ஹைதராபாத்தில், 2006 - மெக்கா மஸ்ஜித் மசூதி குண்டுவெடிப்பு, 2007- ம் ஆண்டு சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, 2008 மலேகான் குண்டு வெடிப்பு ஆகிய தாக்குதல் சம்பவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது பிராமணியத்தின் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இது பிரமாணர்களை குறிப்பிடுவது அல்ல. பிராமணியம் என்பது கொள்கை. அதாவது ஆதிக்கம் செலுத்துவதும், ஒடுக்குவதும் பிராமணியத்தின் முக்கிய அம்சம் ஆகும்.

இந்தியாவில் மத சகிப்பின்மை என்பது நீண்டகாலமாக இருந்து வருகிறது. இப்போது ஏன் இதை பெரிதாக்குகின்றனர் என்று தெரியவில்லை? கடந்த 2008 -ம் ஆண்டு மும்பை தீவிரவாதத் தாக்குதலின் போது பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டதின் மூளையாக உளவுத்துறை இருக்கிறது. மக்கள், இயக்கமாக ஒன்று திரண்டால்தான் கர்கரே மரணத்தின் உண்மையை வெளிக் கொண்டுவர முடியும்" என்று தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-