அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர், நவ.25:
பெரம்பலூர் லாடபு ரம் மயிலூற்று அருவில் 10 ஆண் டுகளுக்கு பிறகு தண்ணீர் கொட்டுவதால் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்குவது மயிலூற்று அருவி. 
பச்சை மலை தொடர்ச்சியின் கிழக்கு எல்லையாகவுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் தொண்டமாந்துரை அருகே கோரையாறு கிராமத்திற்கு மேலே பச்சை மலையில் கோரையாறு அருவியும், மலையாளப்பட்டி அருகே மலை மேல் எட்டெருமைப்பாழி அருவியும், பூலாம் பாடி அருகே பச்சை மலையில் இரட்டைப் புறா அருவியும் இருந்தாலும் இந்த 3 இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் எளிதில் சென்று வர முடியாது. 
மலையின் மேல் குறைந்தது ஐந்தாறு கிலோ மீட்டர் நடந்து சென்று தான் அருவியைக் காணமுடியும். ஆனால் மயிலூற்று அருவி மலையடிவாரத்தில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகம் சென்று வருகின்றனர்.
அகன்ற பாறையின் மீது அமர்ந்துள்ள மயிலொன்று தனது தோகையை பின்னோக்கி விரித்துத் தொங்கவிட்டது போல், வெண்ணிறமாக அருவி சலசலத்து கொட்டுவது இந்த அருவிக்கான சிறப்பம்சமாகும். 

பெரம்பலூரிலில் இருந்து 18கிலோ மீட் டர் தொலைவில் உள்ள லாடபுரத்திற்கு சென்றால், அங்கிருந்து மலையடி வாரத்திற்கு 3 கிலோ மீட்டர் தூரமாகும். அருவியை அடைந்து ஆனந்த நீராடலாம். போக்குவரத்து வசதி மட்டும் குறைவாகவுள்ளது.
கடந்த 10 வரு டங்களாக அருவியில் தண்ணீர் வராமல் இருந்ததால் மலையடி வாரத்திலிருந்து அருவிக்கு செல்லும் பாதை அடர்ந்து காணப்படுகி றது. தற்பொது பெய்யும் கன மழையால் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர். 
செடிகள் அடர்ந்து கிடக்கும் பாதையை சரி செய்து, கூடுதலாக நகரப்பேருந்து வசதி செய்து கொடுத்தால் பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு இன்னும் 2வாரம் குதூகல கொண்டாட்டமாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 
 10 ஆண்டுகளுக்கு பிறகு மயில் ஊற்று அருவில் தண்ணீர் கொட் டுகிறது. இதில் ஆனந்த குளியல் போ டும் இளைஞர் மற்றும் சிறுவர்கள்.
நன்றி  : தினகரன் & வசந்த ஜீவா
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-