அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... மாணவர்களின் மூளைத்திறன் மேம்படும் விதமாக செயல்பட்டு வரும் இந்தியன் அபாகஸ் நிறுவனத்துடன் இணைந்து தாய் அபாகஸ் அகாடமி வி.களத்தூர் பேருந்து நிலையம் அருகில் தொடங்குகிறது. . இந்தியன் அபாகஸ் மூலமாக 5 முதல் 13 வயதிற்குட்பட்ட லட்சக்கணக்கான மாணவர்கள் மனக்கணித மற்றும் கணித முறையிலும் சிறந்து விளங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நமது வி.களத்தூரில் இந்த கணித பயிற்சி நிலையம் தொடங்க இருப்பது நமது ஊர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மாணவர்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும். இந்த அபாகஸ் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள், கணிதத்தை கால்குலேட்டர் இன்றி மிக விரைவாக கணக்கிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இரண்டு கைகளால் எழுதும் பயிற்சி, ; விரைவாக எழுதும் பயிற்சி ஆகியவைகளும் வழங்கப்படுகிறது. அபாகஸ் கல்விமுறை மூலம் மனக்கணிதப் பயிற்சி பெற்ற மாணவர்கள் மிக திறன் வாய்ந்த ஒருமுனைப்படுத்தப்பட்ட சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி, பல்வேறு கோணங்களில் ஆராயும் திறன் மற்றும் மிக தெளிவாக கேட்டு புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களாகவும் கால்குலேட்டர்களைவிட மிக வேகமாகவும் துல்லியமாகவும் மனக்கணித கணக்குளை போடும் திறன் பெற்றவர்களாக திகழ்வார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்புக்கு:97900 49683

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-