அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...திருவாரூர்: அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய அபூர்வ நுண் கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தொல்லியல் வல்லுனர் குடவாயில் சுந்தரவேலு கூறியதாவது: அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 40 கிராமங்களில் பழைய கற்காலம், இடை கற்காலம், புதிய கற்கால மனிதர்கள் நடமாடியது, மாதக் கணக்கில் தங்கி இருந்ததற்கு அடையாளமான கற்கருவிகள் மற்றும் அவை உற்பத்தி செய்யப்பட்ட இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் அணிக்குறிச்சான், சாத்தனைப்பட்டு, நெட்லக்குறிச்சி, மோட்டுத்தெரு, கூவத்தூர், புதுக்குடி, எறவங்குடி, இடைக்குறிச்சி, தாமரைப்பூண்டி, கஞ்சமலைப்பட்டி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் கொளக்கா நத்தம் ஆகிய இடங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
மேலும் அரியலூர் மாவட்டத்தில் ஆதிச்சனூர், அணிக்குறிச்சி, கூழாட்டுக் குப்பம், மைக்கேல் பட்டி, பிழிச்சிக்குழி, நடுப்பட்டி, அணைக்குடம், செங்குந்தபுரம் என்ற ஊர்களிலும் உபகரணங்கள் கிடக்கின்றன. இதில் இடை மற்றும் நுண் கற்காலம் என்பது சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விடுகிறது. வேட்டையும், சேகரிப்புமே கற்கால மனிதனின் தினசரி வேலையாகும். இக்கால கட்டத்தில் கற்கால மனிதன் சிறு குழுக்களாக நாடோடி வாழ்க்கையே மேற்கொண்டிருந்தான். அவர்கள் பயன்படுத்திய கருவிகள் சால்ஸ்டோனி, செர்ட், ப்ளிண்ட் , கிறிஸ்டல் போன்ற கண்ணாடித் தன்மை அதிகமுள்ள இயற்கை கற்களில் உருவாக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட உபயோகத்திற்கேற்ப பிரத்தியேகமாக சிறு கத்தி மற்றும் கிழிப்பான், அம்புமுனை, சுரண்டிகள், முக்கோணம், துளைப்பான், அரைநிலா போன்ற கருவிகள்உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சில ஒன்றிற்கும் மேற்பட்ட முறை உபயோகித்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன . இவ்வாறு சுந்தரவேலு கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-