அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வி.களத்தூர் கிராமத்தில் உள்ள ஹிதாயத் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தாளாளரும், முதல்வருமான அஹமது பாஷா தலைமை வகித்தார். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்த மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர் பேராசிரியர் எஸ். வைரமணி பேசியது:
ஆசிரியர் என்பவர் தேசத்தின் சொத்து.
ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறையில் மட்டுமின்றி சமூகத்திலும் முன்மாதிரியாக திகழ வேண்டும். புன்னகையுடன், நிறைந்த தன்னம்பிக்கையுடன் இருந்தால் நம் சமுதாயத்தை, வளம் பொருந்திய சமுதாயமாக மாற்ற முடியும்.
ஆசிரியர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.இப்பயிற்சியில் இரு பால் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி துணை முதல்வர் மீனாட்சி நன்றி கூறினார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-