அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
தமிழகத்தில், மின் கட்டணம், திடீரென உயர்த்தப்பட்டதால், வீடுகளுக்கு, மின் பயன்பாடு, பதிவு செய்ய வரும் போது, ஏற்கனவே உபயோகப்படுத்திய மின்சாரத்திற்கு, புதிய கட்டணம் கணக்கிட வாய்ப்புள்ளது. இதை, மின் வாரியம், தெளிவுபடுத்தாமல் இருப்பதால், பொதுமக்கள், குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, வீடு, 1.72 கோடி; விவசாயம், 20.47 லட்சம்; வணிகம், 32.87 லட்சம்; தொழிற்சாலை, 5.98 லட்சம்; இதர பிரிவு, 20.77 லட்சம் என, மொத்தம், 2.52 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். வீட்டு மின் இணைப்புக்கு, மின் வாரியம் சார்பில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு, மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.சில தினங்களுக்கு முன், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் கட்டணத்தை, 15 சதவீதம் உயர்த்தியது. இந்த கட்டண உயர்வு, கடந்த, 12ம் தேதி முதல், நடைமுறைக்கு வந்தது.'இரண்டு மாதங்கள், 500 யூனிட் வரை, மின்சாரம் பயன்படுத்தும், வீட்டு மின் நுகர்வோருக்கு, சுமை இல்லாத வகையில், கட்டண உயர்வை, அரசே ஏற்றுக் கொள்ளும்' என, தமிழக அரசு அறிவித்தது.இதனால், 500 யூனிட் வரை, மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில், மின் பயன்பாடு கணக்கிடும் போது, குழப்பம் ஏற்படாது எனத் தெரிகிறது.ஆனால், 500 யூனிட்டிற்கு மேல், மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில், மின் பயன்பாடு கணக்கிடும் போது, பல்வேறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதாவது, கடந்த, 12ம் தேதி தான், மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.மின் வாரிய ஊழியர்கள், வீடுகளுக்கு, அடுத்த மாதம், மின் பயன்பாடு கணக்கிடச் செல்லும் போது, கடந்த, 1ம் தேதி முதல், பயன்படுத்திய மின்சாரத்தையும், புதிய கட்டணத்தில் கணக்கிட வாய்ப்புள்ளது.இதனால், ஏற்கனவே மின் கட்டண உயர்வால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பழைய கட்டணத்தில், பயன்படுத்திய மின்சாரத்திற்கும், புதிய கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:புதிய கட்டண ஆணையின் படி, மின் பயன்பாடு, மின் கட்டணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து, மின் வாரிய அதிகாரிகள், எஸ்.எம்.எஸ்., மூலம் கூட, இதுவரை தெரிவிக்கவில்லை.இவ்வாறு, அவர்கள் விரைவில், தீர்வு காண ஏற்பாடு செய்யப்படும்' கூறினர்.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிய கட்டணம் பற்றி, மின் கட்டண மையங்களில், மக்களின், சந்தேகங்களுக்கு, என்றார்.

உஷாராக இருங்க...: வீடுகளில், மின் பயன்பாடு கணக்கிட வரும் போது, இரண்டு மாத மின் பயன்பாட்டை, 60 நாட்களால், வகுக்க வேண்டும். இதன் மூலம், ஒரு நாள், மின் பயன்பாடு தெரிய வரும்.இதன் மூலம், கடந்த, 1ம் தேதி முதல், 11ம் தேதி வரை, பழைய மின் கட்டணம் (ஒரு யூனிட், 5.75 ரூபாய்); 12ம் தேதி முதல், புதிய கட்டணம் ( ஒரு யூனிட், 6.60 ரூபாய்) என, இரண்டு மின் பயன்பாட்டையும், தனித்தனியாக கணக்கிட வேண்டும்.எனவே, மக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே, கூடுதல் சுமையை தவிர்க்க முடியும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-