அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தோகா,

கத்தாரில் பஸ் மோதியதில் 2 இந்தியர்கள் உள்பட 4 வெளிநாட்டவர்கள் பலியாகினர்.

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியைச் சேர்ந்தவர் கான் முகம்மது முபின் (வயது 33). லக்னோவைச் சேர்ந்தவர் ஜஸ்வன் சஞ்சய்குமார். இருவரும் கத்தாரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். கத்தார் தோகாவில் உள்ள பிரிஜ் அல் ஹனிம் பகுதியில் உள்ள ஒரு பஸ் நிலையத்தில் இருவரும் பஸ்சுக்காக நின்றுகொண்டு இருந்தனர். இவர்களுடன் சில வெளிநாட்டினரும் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக பயணிகள் மீது மோதியது. இந்த விபத்தில் இந்தியர்கள் 2 பேர், ஒரு பெண் உள்பட 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-