அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...




சபரிமலைக்கு போகும் வழியில் எருமேலியில் உள்ள " வாவர் அவுலியாவின் " பெயரில் அமைந்துள்ள பள்ளிவாசல் இது . வாவரை கொள்ளைக்காரன் என்று " அவர்கள் " சொல்லி வைத்து ஐயப்பனை உயர்வாக்கி வைத்தார்கள். " என்னைக் காண்பதற்கு முன்னால் வாவரைக் கண்டுவிட்டுத்தான் வரணும் " என்று ஐயப்பனே சொல்லி விட்டதால் வாவரை தரிசித்துவிட்டுத்தான் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனைக் காணச் செல்கிறார்கள். இப்போது வாவர் பள்ளியையும் பெரிதாகக் கட்டி இருக்கிறார்கள்.
உண்மையில் ... நான் அறிந்த வரலாறு... ஐயப்பனை ஒழித்துக்கட்ட அவனிடம் புலிப்பால் கொண்டுவரச் சொல்லி காட்டுக்கு அனுப்புகிறார்கள். சின்னைப்பிள்ளை ஐயப்பனால் புலிப்பால் கொண்டு வர முடியுமா ?
ஐயப்பன் காட்டுக்கு வருகிறார். அங்கே வாழ்க்கையின் சுகங்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு அல்லாஹ்வின் அருளை நாடி அந்தக் காட்டுக்குள்ளே தனிமையில் இறையைத் தொழுது தனியே வாழ்ந்து வருகிறார் வாவர். அவரது வழி ... இப்ராஹீம் பின் அத்ஹமின் வழி. சூபியாக்களின் வழி.
அப்போதுதான் ஐயப்பன் அங்கே வருகிறார். யானைகளும் சிங்கமும் புலியும் நிறைந்து வாழும் அந்த கொடும் காட்டில் திகைத்து நிற்கிறார்.
வாவர் ஐயப்பனை பார்த்து விசயங்களை விளங்கிக் கொண்டு.. அவருக்கு உதவுகிறார்.
ஒரு புலியை அழைத்து , அதனிடம் பாலைப் பெற்று , அதை ஐயப்பனிடம் கொடுத்து அனுப்புகிறார். புலிப்பாலோடு அரண்மனைக்குச் சென்ற ஐயப்பனைப் பார்த்து எல்லோரும் திகைக்கிறார்கள். அவரது ஆற்றலை எண்ணி அஞ்சி அவருக்கு அரசராக முடி சூட்ட முன் வருகிறார்கள். ஆனால் வாவரால் கவரப்பட்ட ஐயப்பன் அரச பதவியை வேண்டாம் என்று சொல்லி விட்டு வாவரைத் தேடி காட்டுக்கே வந்து விடுகிறார்.
அதன் பிறகு ஆன்மீக பாடங்களை வாவரிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்.
கொடிய விலங்குகள் வாழும் கட்டில் ஒரு மனிதர் தனித்து வாழ முடியுமா ? வாவர் ஒரு கொள்ளைக்காரனாக இருந்தால் நாட்டில் சந்தோசமாக வாழ்வதை விட்டு விட்டு ஞானியாக காட்டில் வாழ்வாரா ?
இதையெல்லாம் மறைத்து விட்டு அவரை வில்லனைப்போல் சித்தரித்து விட்டார்கள். ஆனால் ஐயப்பன் வாவரை மதித்ததை மட்டும் மறக்காமல் சொல்கிறார்கள்.
வாவர் மற்ற முச்லிம்களைப்போல் திருமணம் முடித்து குழந்தைகள் பெற்று சிறப்பாக வாழ்ந்து... ஒரு காலகட்டத்தில் இறை அன்பை நாடி காட்டுக்குள் வந்து தனித்து வாழ்ந்தவர். அவரது வழிவந்தவர்கள் இன்றும் " வாவர் குடும்பத்தினர் " என்று அழைக்கப்படுகிறார்கள்.


படத்தில்... எரிமேலியில் உள்ள வாவர் பள்ளி .
படம் உதவி :


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-