அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

அனைத்து ஊர் ஜமாஅத் நிர்வாகளுக்கு வக்பு வாரியத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம்..! முத்தவல்லி, சம்பந்தப்பட்ட ஜமாஅத்தார்களை சமூக புறக்கணிப்பு மற்றும் ஊர் நீக்கம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. எந்த காரணத்தைக் கொண்டும், ஜமாஅத்தார்களுக்கு தேவைப்படும் நேரத்தில் திருமண பதிவு புத்தகம் வழங்க மறுப்பது மற்றும் இறந்தவர்களை அடக்கம் செய்ய மறுப்பது மற்றும் இறப்புச் சான்றிதழ் வழங்காதிருப்பது போன்ற செயல்களில் நிர்வாகக்குழு ஈடுபடக் கூடாது. வாரிய உத்தரவைப் புறக்கணித்து இவ்வாறான செயல்களில் நேரடியாகவே மறைமுகமாகவே ஈடுபடும் முத்தவல்லியை பதவி நீக்கம் செய்ய தமிழ நாடு வக்ஃப் வாரியத்திற்கு முழு அதிகாரம் உண்டு.
நன்றி :http://kadayanallur.org/அனைத்து-ஊர்-ஜமாஅத்-நிர்வ/

5 கருத்துரைகள்:

 1. இந்த உத்தரவு இன்னும் அமுலில் இருக்கிறதா ?... பல ஊர்களில் இந்த அநியாய நடவடிக்கைகளை பல ஜமாத்கள் செயல்படுத்தி வருகிறதே !...

  பதிலளிநீக்கு
 2. கடந்த மாதம் ஆவணம் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் ஊர் நீக்கம் குறித்த புகாருக்கு பதில் எழுதிய வக்புவாரியம் அனுப்பிய கடிதத்தில் இணைத்து அனுப்பிவைத்த கடிதம் இது.

  பதிலளிநீக்கு
 3. /////அனைத்து ஊர் ஜமாஅத் நிர்வாகளுக்கு வக்பு வாரியத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம்..! முத்தவல்லி, சம்பந்தப்பட்ட ஜமாஅத்தார்களை சமூக புறக்கணிப்பு மற்றும் ஊர் நீக்கம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. எந்த காரணத்தைக் கொண்டும், ஜமாஅத்தார்களுக்கு தேவைப்படும் நேரத்தில் திருமண பதிவு புத்தகம் வழங்க மறுப்பது மற்றும் இறந்தவர்களை அடக்கம் செய்ய மறுப்பது மற்றும் இறப்புச் சான்றிதழ் வழங்காதிருப்பது போன்ற செயல்களில் நிர்வாகக்குழு ஈடுபடக் கூடாது. /////
  தாங்கள் மேலே குறிப்பிட்ட இந்த செய்தி தாங்கள் இணைத்துள்ள வக்போர்ட் இன் கடித நகலில் எந்த பகுதியிலும் இல்லையே? இதில் எந்த பகுதியில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தவறுக்கு வருந்துகிறேன்.2ம் பக்கத்தில் உள்ளது.தற்போது இணைத்து விட்டேன்.

   நீக்கு
 4. அப்படியே சரீஅத் சட்டத்துக்குப் புறம்பாக யாரும் தலாக் செய்ய அனுமதிக்கக்கூடாதுன்னும் ஒரு எச்சரிக்கை விடுக்கலாம்.

  பதிலளிநீக்கு

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-