அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஜன. 4:
படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 28ம்தேதி கடைசி நாள் என பெரம்பலூர் கலெக்டர் தரேஸ்அகமது தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளியில் எஸ்எஸ்எல்சி பயின்று தேர்ச்சி பெறாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் பதிவுசெய்து, தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கு, பெரம்பலூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 2007 டிசம்பர் மாதம் 31ம்தேதியன்றோ அதற்கு முன்னரோ பதிவு செய்தவராக இருக்கலாம்.
மனுதாரர் தனது வேலைவாய்ப்புத்துறை அலுவலக அடையாள அட்டையை தவறாமல் தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்த வர்கள் 2012 டிசம்பர் மாதம் 31ம்தேதியில் 45 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் 40வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு 50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மனுதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவிகளாக இருத்தல் கூடாது. எனினும் தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம். மனுதாரர் சுயமாக எதுவும் தொழில் செய்பவராவோ, சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருத்தல் கூடாது. புதிய விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு பூர்த்திசெய்த படிவங்கள் வரும் பிப்ரவரி 28ம்தேதிவரை பெறப்படும்.
மனுதாரர் விண்ணப்பப்படிவம் பெற்றுக்கொள்வதற்கு தங்களது பள்ளிக்கல்விச் சான்றுகள், கல்லூரி படிப்பு சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு துறை அலுவலக அடையாள அட்டை, ஏற்கனவே உதவித்தொகை பெறுபவர்கள் இந்த ஆண் டிற்கு செலுத்த வேண்டிய சுயஉறுதிமொழி ஆவணம் ஆகியவற்றை வரும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் தவறாமல் செலுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் தரேஸ் அகமது தெரிவித்துள்ளார்.


நன்றி : தினகரன்

 2012 ஆண்டு கண்ணோட்டம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-