நீங்கள் உங்கள் லேப்டாப்பை பாதுகாப்பாக/ நீண்டநாள் பாவனையுடன் வைத்திருக்க விரும்புகிறீர்களா? எந்த நேரமும் லேப்டாப் பாதுகாப்பு பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களா? எப்படி முழுமையான பாதுகாப்பை பெறுவது என்று தேடிக்கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான தீர்வு.
சாதாரண Desk Top கணினிகளுடன் ஒப்பிடுகையில் லேப்டாப்களின் பாதுகாப்பு/ பராமரிப்பு அத்தியாவசியமானதும் சிறிது கடினமானதும் கூட. இன்று அநேகமானோர் லேப்டாப்பை பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் லேப்டாப்பை கையாள்வதற்கான அடிப்படை வழிகளை கூட பின்பற்றுவதில்லை. அநேகமாக பெரும்பாலானவர்கள் லேப்டாப்பை வெளியில் எடுத்துச்சென்றுதான் பாவிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அதற்குரிய சரியான பாதுகாப்பை கொடுக்காவிட்டால், அந்த லேப்டாப்பின் பாவனை காலத்தை இழக்கவேண்டி இருக்கும். இங்கு லேப்டாப் பாதுகாப்பிற்கான சில வழிகளை தருகிறேன்.
திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கான மென்பொருள்
லேப்டாப்பை தொலைப்பவர்களை எடுத்து பார்த்தால் அவர்களில் பெரும்பாண்மையானவர்கள் தங்கள் லேப்டாப்பை வெளி இடங்களில் சார்ஜ் செய்யும்போதுதான் தொலைத்திருப்பார்கள்/ பறிகொடுத்திருப்பார்கள். இதை எப்படி தடுப்பது? அதற்கும் இருக்கிறது வழி. லேப்டாப்பை AC அடாப்டருடன் கூடிய Power Connector மூலமே சார்ஜ் இடுவோம். இந்த Power Connector ஐ அகற்றும்போது எச்சரிக்கை ஒலி எழுப்பக்கூடிய மென்பொருள்களை உபயோகிக்கலாம். இதற்கு பல மென்பொருள்கள் இருந்தாலும் ALARM என்ற மென்பொருள் சிறப்பானதும் இலவசமானதும். தரவிறக்க ALARM. இந்த மென்பொருளை நிறுவி விட்டால், Power Connector ஐ வேறு யாராவது அகற்றினால் உரத்த ஒலியை எழுப்பி உங்களை உசாராக்கிவிடும்
அடுத்த வழி Map அல்லது GPRS System மூலம் திருடப்பட்ட உங்கள் லேப்டாப் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது. அதற்கு Prey என்னும் மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருளை நிறுவி ( ஆன்லைனில்) உங்களுக்கான கணக்கு ஒன்றை ஆரம்பித்து விட்டால், உங்கள் லேப்டாப்பை யார் திருடினாலும் அவரது இருப்பிடத்தை/ அதாவது உங்கள் லேப்டாப் இருக்கும் இடத்தை Trace பண்ணி கண்டறியலாம். Prey மென்பொருள் உங்கள் லேப்டாப் உள்ள சரியான இடத்தை குறிப்பிட்டு காட்டுகிறது. அத்தோடு இந்த மென்பொருள் முற்றுமுழுதாக இலவசமாகும்.
Over Heat பிரச்சினை
எப்பொழுதும் உங்கள் லேப்டாப் Over Heat ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெப்பமான பிரதேசங்களில் அதிக நேரம் பாவிப்பதையும் தவிருங்கள். இப்படியான சம்பவங்களால் பாட்டரி பழுதடைய கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. அதோடு அநேகமான சந்தர்ப்பங்களில் ஹார்ட் டிஸ்க் மற்றும் சில Internal parts ஐயும் பழுதடைய செய்துவிடும். சில வேளைகளிக் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி சேமிக்கப்பட்டிருந்த தரவுகள் அனைத்தும் அழிந்துவிடும். ஆகவே லேப்டாப்பை வெளியில் எடுத்து செல்லமுன்னர் சுற்று சூழல் பற்றி அதிக கவனமெடுங்கள்.
- குளிரூட்டப்பட்ட அறைகளில் (Air conditioned) இருந்து சட்டென சாதாரண வெப்ப நிலையுள்ள பகுதிக்கு எடுத்து வராதீர்கள்.
- அப்படி மாறுபட்ட வெப்பநிலையுள்ள பிரதேசத்துக்கு மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டால் லேப்டாப்பை ஆஃப் செய்துவிட்டு எடுத்து செல்லுங்கள்.
- வெப்பநிலையான பிரதேசங்களில் ( சாதாரன வெப்பநிலையில் கூட) 2 மணித்தியாலங்களுக்கு மேலாக பாவிப்பதை தவிருங்கள்
- எங்கு சென்றாலும் லேப்டாப்புடன் ஒரு பொலுத்தீன் பையை எடுத்து செல்லுங்கள். பயணங்களின் போது லேப்டாப்பின் மீது நீர் படுவதை தவிர்க்கமுடியும்.
- Cool pad ஐ பாவிப்பது நல்லது. 2 மணிநேரத்துக்கு அதிகமாக பாவிக்கவேண்டியிருந்தால் Cool Pad ஐ உபயோகியுங்கள். லேப்டாப்பின் Heat ஐ ஓரளவிற்கு குறைக்கும்
- அவன் (Microwave Ovens), டிவிடி ப்ளேயர், டி.வி ஏனைய இலத்திரணியல் உபகரணங்களுக்கு அருகில் லேப்டாப்பை எடுத்து செல்வதை முற்றாக தவிருங்கள். இவற்றில் இருந்து வரும் காந்த சக்தி லேப்டாப்பின் ஹார்ட் டிஸ்கை நிச்சயம் பாதிக்கும்
- லேப்டாப்பை ஆஃப் செய்து ஒரு நிமிடத்துக்குள் மறுபடியும் ஆன் செய்யாதீர்கள். ஆகக்குறைந்தது 2 நிமிட இடைவெளியையாவது பேணுங்கள்.
- லேப்டாப் மீது நீர் படவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஈரத்தன்மை காயும் வரை லேப்டாப்பை ஆன் செய்வதை தவிருங்கள். ஈரத்துடன் ஆன் செய்வதால் short circuit ஏற்பட வாய்ப்புள்ளது.
- அளவுக்கதிகமாக லேப்டாப்பை சார்ஜ் செய்யாதீர்கள். ஆரம்பத்தில் AC அடாப்டரை பழுதுபடுத்தும். பின்னர் காலப்போக்கில் லேப்டாப்பின் Internal Parts ஐ பாதிக்கும்
- அதிக மழைபொழிவின் போது சார்ஜ் இடுவதை தவிருங்கள். வீட்டில் இருந்தால் UPS மூலம் சார்ஜ் இட முயற்சியுங்கள்.
பலர் ஏனைய பாதுகாப்பு விடயங்களில் கவனம் செலுத்தினாலும் பாட்டரி விடயத்தில் கவனம் செலுத்த தவறுகின்றனர். இதனால் பாட்டரி குறுகிய காலத்துக்குள்ளேயே செயலிழந்து போகிறது. இதை தடுப்பதற்கு
- லேப்டாப்பை சார்ஜ் செய்யும்போது ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்
- சார்ஜ்ஜிங் முழுவதுமாக முடியும்வரை காத்திருங்கள். வழக்கமாக 2 தொடக்கம் 3 மணித்தியாலங்களில் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும்
- சூரிய வெளிச்சமுள்ள இடங்களில் பாட்டரியை வெளியே எடுக்காதீர்கள்
- லேப்டாப்பையோ அல்லது பாட்டரியையோ வெப்பமுள்ள இடங்களில் வைக்காதீர்கள்.
மேலே குறிப்பிட்டவை பாட்டரியை பாதுகாப்பதற்கான External வழிகள். இப்போது சில Internal முறைகளை பார்ப்போம்
- Wi-fi, Bluetooth போன்றவற்றை பாவிக்காதபோது ஆஃப் செய்துவிடுங்கள்
- பாட்டரி சார்ஜ் 50 % இற்கும் குறைவாக இருக்கும்போது High Resolution கொண்ட வீடியோ கேம்ஸ் விளையாடாதீர்கள். இப்படியான கேம்ஸ் பட்டரியை இரு மடங்கு வேகமாக சார்ஜ் ஐ குறைக்கும்
- USB port பட்டரி Life ஐ குறைக்கும். ஆகவே USB Mouse, Joystick, Pen Drive போன்றவற்றை பாவிக்காத நேரங்களில் அகற்றிவிடுங்கள்.
- லேப்டாப் Screen ஐ மாத்திரம் ஆஃப் செய்யும் மென்பொருள்களை உபயோகித்து தேவையற்ற நேரங்களில் Screen ஐ ஆஃப் செய்துவிடுங்கள். TurnOffMonitor 1.0 இந்த மென்பொருளை நிறுவி Shift+F1 ஐ உபயோகித்து Screen ஐ ஆஃப்/ ஆன் செய்துகொள்ளலாம்
- தேவையில்லாதபோது சிடி ட்றைவில் உள்ள சிடிக்களை அகற்றிவிடுங்கள்
- Screen Server களை உபயோகிப்பதை தவிருங்கள்
- முக்கியமாக Screen இன் Brightness குறைத்து வையுங்கள்
சிறந்த பாதுகாப்பு மென்பொருள்களை நிறுவி கொள்ளுங்கள்.
கணினி பாதுகாப்பிற்கென ஏராளமான மென்பொருள்கள் இருக்கின்றன. அவற்றில் சிறந்த மென்பொருள்களை தெரிவு செய்து பயன்படுத்தலாம். IObit Toolbox என்னும் மென்பொருள் இவற்றுள் சிறப்பானது. Cleaning, Repairing, security என 20 வகையான Categories ஐ கொண்டுள்ளது இந்த மென்பொருள்.
BattCursor என்ற மென்பொருள் பாட்டரி சார்ஜ் அளவு குறைவடையும் போது உங்களுக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கும். இந்த மென்பொருளை நிறுவி விட்டால் பாட்டரி குறைவடையும்போது மவுஸ் கேர்ஸருக்கு கீழே பாட்டரியின் அளவை காட்டிக்கொண்டிருக்கும்.
மெமரியை சேமியுங்கள்
ஹார்ட் டிஸ்கில் போதுமான இடம் இல்லாதபோது மென்பொருள்களை நிறுவுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் Portable மென்பொருள்களை USB Drive இனுள் சேமித்து பயன்படுத்துங்கள்
ஸ்கிரீன் மற்றும் கீபோர்டில் கவனம் செலுத்துங்கள்
எந்த வேளையிலும் லேப்டாப்பின் ஸ்கிரீன் மற்றும் கீபோர்ட் சரியான முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துக்கொள்ளுங்கள். பலவேளைகளில் நாம் கீபோர்டை சரியான முறையில் பராமரிப்பதில்லை. இப்படியான சமயங்களில் கீபோர்டில் தூசி படிந்திருப்பதை அவதானிக்கலாம். இவை கீபோர்டின் தொழில்பாட்டு வேகத்தை குறைக்கிறது. லேப்டாப்பின் முன் இருந்து உணவு அருந்துவதை தவிர்க்கலாம். அல்லது கீபோர்ட், ஸ்கிரீனுக்கு Protect Covers உபயோகிக்கலாம்
முக்கியமான விடயம் பெரும்பாலானவர்கள் லேப்டாப்பின் ஸ்கிரீன் பற்றி அதிகம் கவனம் செலுத்துவதில்லை. மிகவும் கவனமாக பாதுகாக்கப்படவேண்டியவற்றுள் ஸ்கிரீனும் ஒன்று. screen guard உபயோகிப்பது நல்லது. Scratches, Marks போன்றவற்றில் இருந்து screen guard பாதுகாப்பை கொடுக்கும்.
ஈரமான எதை கொண்டும் ஸ்கிரீனை Clean செய்யாதீர்கள். உலர்ந்த மென்மையான துணிகளை கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
அத்தோடு சில அடிப்படையான மென்பொருள்களை நிறுவிக்கொள்ளுங்கள். Disk Space, CPU Usage போன்றவற்றை அறிந்துகொள்ள FreeMeter என்ற மென்பொருளை உபயோகியுங்கள்
Battery Care என்ற மென்பொருளின் மூலம் battery capacity, Battery Mode, Basic Information போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்
BattCursor என்ற மென்பொருள் பாட்டரி சார்ஜ் அளவு குறைவடையும் போது உங்களுக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கும். இந்த மென்பொருளை நிறுவி விட்டால் பாட்டரி குறைவடையும்போது மவுஸ் கேர்ஸருக்கு கீழே பாட்டரியின் அளவை காட்டிக்கொண்டிருக்கும்.
மெமரியை சேமியுங்கள்
ஹார்ட் டிஸ்கில் போதுமான இடம் இல்லாதபோது மென்பொருள்களை நிறுவுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் Portable மென்பொருள்களை USB Drive இனுள் சேமித்து பயன்படுத்துங்கள்
ஸ்கிரீன் மற்றும் கீபோர்டில் கவனம் செலுத்துங்கள்
எந்த வேளையிலும் லேப்டாப்பின் ஸ்கிரீன் மற்றும் கீபோர்ட் சரியான முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துக்கொள்ளுங்கள். பலவேளைகளில் நாம் கீபோர்டை சரியான முறையில் பராமரிப்பதில்லை. இப்படியான சமயங்களில் கீபோர்டில் தூசி படிந்திருப்பதை அவதானிக்கலாம். இவை கீபோர்டின் தொழில்பாட்டு வேகத்தை குறைக்கிறது. லேப்டாப்பின் முன் இருந்து உணவு அருந்துவதை தவிர்க்கலாம். அல்லது கீபோர்ட், ஸ்கிரீனுக்கு Protect Covers உபயோகிக்கலாம்
![]() |
Protect Cover |
ஈரமான எதை கொண்டும் ஸ்கிரீனை Clean செய்யாதீர்கள். உலர்ந்த மென்மையான துணிகளை கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
அத்தோடு சில அடிப்படையான மென்பொருள்களை நிறுவிக்கொள்ளுங்கள். Disk Space, CPU Usage போன்றவற்றை அறிந்துகொள்ள FreeMeter என்ற மென்பொருளை உபயோகியுங்கள்
Battery Care என்ற மென்பொருளின் மூலம் battery capacity, Battery Mode, Basic Information போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்
thanks.........
பதிலளிநீக்கு