டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடியவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். அவர்களை தூக்கில் தொங்க விட வேண்டும் என்று லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசினார். ராஜ்யசபாவில் இதுதொடர்பாக நடந்த விவாதத்தின்போது சோகம் தாங்க முடியாமல் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் கண்ணீர் விட்டு அழுதார். இதனால் அவையே உருக்கமான சூழ்நிலைக்கு மாறியது.
கண்ணீர் விட்டு அழுத ஜெயா பச்சன் ராஜ்யசபாவில் ஜெயா பச்சன் பேசுகையில், கண்ணீர் விட்டு அழுதார். அவர் கூறுகையில், இந்த நாடாளுமன்றத்தில் உட்கார எனக்கு அவமானமாக உள்ளது. எல்லாம் இருக்கட்டும், இந்த கடும் பாதிப்பை சந்தித்துள்ள குடும்பத்துக்கு இந்த அரசோ அல்லது டெல்லி அரசோ முதலில் ஒரு இரங்கலைத் தெரிவித்ததா, வருத்தம் தெரிவித்ததா. இந்த அவமானகரமான செயலுக்காக வருந்துகிறோம் என்று எந்த அரசாவது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதா?. அடிப்படையில் நான் ஒரு கலைத் துறையைச் சேர்ந்தவள்.
இந்த சம்பவத்தால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். அந்தப் பெண்ணின் நிலையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். எல்லோரும் ஓரிரு நாளில் இந்த சம்பவத்தை மறந்து விடுவார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுவதும் அந்த துயரம் துரத்தி வருமே…ஆறாத வடுவாக அது கூடவே இருக்குமே… மனதளவில் அந்தப் பெண் எவ்வளவு துயரத்தை அனுபவிப்பார். இதற்கெல்லாம் எப்படி ஈடு செய்ய முடியும் என்று கூறியபடி அழுதார் ஜெயா. பின்னர் சிறிது நேரம் பேச்சை நிறுத்திய அவர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார்.
அவர் பேசுகையில், ஒவ்வொரு நாளும் எத்தனையோ பெண்கள் தங்களது தந்தைகளாலும், சகோதரர்களாலும், உறவினர்களாலும் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகிக் கொண்டுள்ளனர். நாட்டுக்கு இது மிகப் பெரிய அவமானமாகும். இந்த உலகுக்கு உங்களைக் கொண்டு வந்த பெண்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறு இதுதானா.. அவர்களுக்கு பாதுகாப்பே கிடையாதா… என்றார் ஆவேசமாக.
-நேற்றைய செய்தி…
ஆஹா…ஓஹோ…பேஷ்…பேஷ்…வாங்கம்மா…வாங்க…வாங்க…ஜெயா பச்சன்…கலைத்துறையை சேர்ந்த நீங்கள் ஒரு அப்பாவி பெண்ணுக்காக கண்ணீர் வடித்துள்ளீர்கள்…அடிப்படையில் கலைத்துறையை சேர்ந்த நீங்கள் வருத்தப்படுவது நிறைய ஆச்சரியத்தை தருகிறது…சினிமா மக்களிடையே பரவலான பின் தான் இந்த கோரங்களும்,சம்பவங்களும் அதிகரித்துள்ளது….
ஒவ்வொரு நாளும் எத்தனையோ பெண்கள் தங்கள் தந்தையாலும்,சகோதரராலும்,உறவினராலும் னபங்கப்படுத்துவதை எண்ணி வேதனைப்பட்டீர்களே….24 மணிநேரமும் பெண்களை போகப்பொருளாக காட்டி சதை வியாபாரிகளாக சித்தரிக்கும் கலைத்துறையும் இதற்கு முழு முக்கிய ஒரு காரணமென்று தெரியுமா…???
மனிதர்களின் ளைகளிலும்,எண்ணங்களிலும்ஆபாசத்தையும்,வக்கிர எண்ணங்களையும் வலுக்கட்டாயமாக விதைப்பதில் தாங்கள் இருக்கும் கலைத்துறையும் ஒரு காரணமென்று தெரியுமா…???? சிகரெட்டையும்,மதுபானத்தையும் ஹீரோயிஷமாக நினைத்துதன் உடலையும்,மனதையும்,குடும்பத்தையும் கெடுத்து குட்டிச்சுவராக்கி நடுத்தெருவில் விட்ட ஒவ்வொரு குடிமகனுடைய குடும்பத்தாரின் பாவத்திலும்,வயிற்றெரிச்சலிலும் உங்களில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு தெரியுமா…???
பருவத்தில் மட்டுமே வரவேண்டிய எண்ணங்களை ஆறு, ஏழு வயது பிள்ளைகளிடம் விதைத்து அவர்களின் அறிவுக்கண்ணை குருடாக்கி
ஆபாசக்கண்ணை திறந்து வைத்ததில் பங்கு உங்களில் ஒவ்வொருவருக்கும் உண்டு தெரியுமா…?
உங்களுக்கு அழுகை வரவேண்டும் என்றால் உங்க மருமகள் தங்களுடைய கணவருடன் மேடையில் ஒன்றாக நடனம் ஆடியபோது கலாச்சாரமீறலாக இருக்கிறதே என்று கண்ணீர் சிந்தி அழுதிருக்க வேண்டும்….இதே அழுகை குஜராத்தில் திட்டமிட்டு ஒரு சமூகத்தையே கூண்டோடு அழித்தபோது தங்களுக்கு வந்ததா..???
அடுத்து சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு ஒரு கேள்வி….?

ஆம்…பலாத்காரம் செய்த அந்த கயவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என ஆவேசமாக பேசினீர்களாம்…வெரி குட்….வெரி குட்….தங்கள் கருத்தை வழிமொழிகிறேன்….!!!!
அப்படியே குஜராத்தில் உள்ள நரபலி கயவர்களுக்கும் தூக்குதண்டனை கொடுக்க வேண்டும் என சொல்லுங்களேன்…தங்களுக்கு மனசாட்சி இருந்தால்….நீதி எல்லாத்துக்கும் ஒண்ணா இருக்கணும்….அது குஜராத்தா இருந்தா என்ன?டெல்லியா இருந்தா என்ன?

அப்புறம் கலைத்துறையில் உள்ளவர்களை பதவியில் உட்காரவைக்கும் பல அரசியல்கட்சிகளில் மிகப்பெரும் அரசியல் கட்சியின் தலைவியான நீங்கள்அரை நிர்வாணமாக ஆடித்திரிவதால்
பிரபலமானவர்களைதேர்தலில் நிற்க வைப்பதன் மூலமும்,பிரச்சாரம் செய்ய வைப்பதின் மூலமும் நீங்க ஓட்டு வேணும்னால் வாங்கலாம்…சமுதாயத்தில் என்ன முன்னேற்றத்தையும் கொண்டு வரமுடியாது….
பத்மஸ்ரீ,பத்மபூஷன் விருதுகளை எல்லாம் கலைத்துறைக்கு கொடுக்குறீங்களே….அவங்க என்ன கலைச்சேவை செஞ்சாங்க….கலைத்துறையாம்….கட்டவிளக்குமாத்து யாம்….அதுக்கு விருது ஒன்னு கேடா…????சினிமாவில் பிராக்டிகல் கிளாஸ் எடுக்கிறாங்க…..அதுதான் நாட்டுல நடக்குது….ஒரு பத்து வருஷத்துக்கு சினிமாவை தடை பண்ணுங்களேன்….இந்த மாதிரி சம்பவங்கள் எல்லாம் நடக்காது…..
சினிமாவை தடை செய்தால் பெண்கள் அரைகுறை ஆடை அணிவது குறையும்….பொது இடத்தில் பெண்களை மானபங்கப்படுத்துவது போன்ற சம்பவங்கள் குறையும்…பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடிப்போகும் சம்பவங்கள் குறையும்…மக்கள் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுவார்கள்….அதிகாலையில் எழுந்தால் நோய்கள் ஓடிப்போகும்….மக்களின் பணம் சினிமாவுக்கு போகாமல் மிச்சமாகும்….சீக்கிரமே நாடு முன்னேறிடும்…அப்புறம் அமெரிக்கா நம்மிடம் வந்து கடன் கேட்கும் நிலை கூட உருவாகலாம்….

NANRI : ABDUL LATHIF .KADAYANALLUR
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.