அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
         நீ என்னைக் காதலிக்கக் கூட
வேண்டாம்.. உன் தோழிகளில்
ஒருத்தியிடமாவது என்னைக் காட்டி
அவன் என்னைக் காதலிக்கிறான்
என்று ஒரே ஒரு முறை
சொல் அது போதும்..

              உன்னை இரவு உடையில்
இன்று பார்த்து விட்ட
சூரியன் நிலவிடம் கெஞ்ச
ஆரம்பித்து விட்டது கொஞ்ச
நாள் நீ பகலைப் பார்த்துக் கொள்..
நான் இரவினைப் பார்த்துக்
கொள்கிறேன் என்று..


                துணிக் கடைப் பொம்மைகள்
தானாகவா சேலை கட்டிக்
கொள்கின்றன..?
நீ மட்டும் ஏன் நீயே சேலை
கட்டிக் கொள்வேன் என்று
அடம் பிடிக்கிறாய்..

                நட்சத்திரங்களை எண்ண முடியாது தான்
ஆனால் நீ எண்ண ஆரம்பித்தால்
மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்
என்று அவைகளே ஓடிவந்து
உன்னிடம் சொல்லி விடும்..


                அடுத்த ஜென்மத்தில் உன்னிடம்
பேசிக் கொள்ளலாம்..!!!
இந்த ஜென்மத்தில் உன்னைப்
பார்த்துக் கொண்டிருப்பதே போதும் எனக்கு..


               நீ சுயம்வரம் வைத்தால்
உலகத்தில் எத்தனை
கடவுள்கள் இருக்கின்றன
என்பது தெரிந்து விடும்.

                நீ மார்போடு அனைத்து
வந்த புத்தகத்தை எடுத்துப்
பிரித்துப் பர்த்தேன்
படிக்கவே முடியவில்லை..
எல்லா எழுத்துக்களும்
மயங்கிக் கிடக்கின்றன..


                நீ தினமும் பொம்மையை
அனைத்தபடி தூங்கி விடுகிறாயாமே..?
நீ தூங்கிவிடுவாய்
அந்தப் பொம்மை தூங்குமா சொல்..?

                நீ என்னோடு போடும்
சின்னச் சின்னச் சண்டைகளை
எல்லாம் பெரிய,பெரிய
சந்தோக்ஷங்களாகவே முடித்து வைக்கிறது
காதல்.................................................................


               நீ ஒரு வாக்கியம்
நான் ஒரு முற்றுப்புள்ளி
நீ முடியும் இடத்தில்-என்னை
நானே வைத்துக் கொள்கிறேன்..  

                என்னால் கவிதை எழுதத்தான்
இயலும்.உன்னைப் போல்
கவிதையாகவே இருக்க இயலாது..

               எப்போதும் நீ இருக்கும் இடத்தில்
காற்று வேகமாக அடித்தபடி,
உன் ஆடையோடு விளையாடுவதனைப்
பார்த்தால் எனக்கு சந்தேகமாக இருக்கிறது
காற்று உன்னைக் களவாடுகிறதோ என்று..


               உன் இதழ்கள் இரண்டும்
ஒன்றை ஒன்று
காதலிக்கின்றனவா……?
நீ பேசும் போது எல்லாம்
மாறி,மாறி ஒன்றையொன்று
முத்தமிட்டுக் கொண்டே இருக்கின்றதே..!!

இந்தக் கவிதைகள் அனைத்தும் நான் படித்ததில் பிடித்தமானவை மட்டுமே...என் மனதைக் கவர்ந்தது போல் உங்கள் மனதையும் கவரும் என எண்ணுகிறேன்... 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-