அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தொழில்நுட்பத்தில்
தினமும் ஒவ்வொரு புதுமைகள் வந்து கொண்டிருக்கிறது. அது போல அந்த தொழில்நுட்பத்தை வைத்தே பல விதமான மோசடிகளும் நடந்து கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் பணத்தை திருடுவதற்கு மோசடி ஆசாமியே எப்படியெல்லாம் பேச முடியுமோ அப்படி பேசி பணத்தை பறித்து விடுவார். பணத்தை திருடும் ஆசாமியின் முகம் தெரியும். ஆனால், தொழில்நுட்பம் அதிவேக வளர்ச்சியை கண்டு வரும் இந்த யுகத்தில் மோசடி ஆசாமி உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே சுலபமாக பணத்தை சுருட்டி விடுகிறார். இதற்கு முக்கிய ஆயுதமாக மோசடி ஆசாமிகள் பயன்படுத்துவது இன்டர்நெட்டை தான்.
இதை மூலதனமாக வைத்துக் கொண்டு மூளையை கொஞ்சமாக கசக்கி உட்கார்ந்த இடத்திலேயே லட்சக்கணக்கில் மோசடி ஆசாமிகள் சுலபமாக சம்பாதித்து வருகிறார்கள். இந்த மோசடி ஆசாமிகளில் பெரும் �தலை�களாக இருப்பது நைஜீரியர் ஆசாமிகள். மெட்ரோ சிட்டியான சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பலருக்கு ஒரு இமெயில் வந்து விழுந்தது.
�க்ஷீ 1 கோடி லாட்டரி விழுந்து இருக்கிறது. 3 லட்சம் கட்டினால் உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வந்து விழும்� என்று மயக்கும் வார்த்தைகளுடன் அந்த இமெயில் இருந்தது. இதனை நம்பி �அய்யா நமக்கு கோடி வரப்போகிறது� என்று அந்த இமெயிலில் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு லட்சக்கணக்கில் பணத்தை போட்டனர்.
ஆனால், முதலை வாய்க்குள் போட்டது போல அந்த பணம் திரும்ப வரவில்லை. கோடியும் வரவில்லை. பின்னர் தான் அந்த இமெயில் மோசடியானது என்பது நம்மவர்களுக்கு புரிந்து போலீசில் புகார் செய்ய தொடங்கினர்.
போலீசும் விசாரணை நடத்தி இது போன்ற மோசடிகளை அரங்கேற்றி பணத்தை ஆட்டய போடுறது நைஜீரிய ஆசாமிகள் என்பது தெரிந்து 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதையடுத்து போலீசார் �ஏமாறாதீர்கள் ஏமாறாதீர்கள்� என்று கூக்குரலிட்டதால் மோசடி இமெயிலை பலர் ஒதுக்கினர். தற்போது நைஜீரிய மோசடி ஆசாமிகள் மீண்டும் தலை தூக்க தொடங்கி விட்டனர். இமெயில் மூலம் அல்ல. திருமண வெப்சைட் மூலம்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணா நகர் பெண் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கும் புகார் என்னவென்றால், �ஆன்லைன் திருமண வெப்சைட் ஒன்றில் திருமணத்திற்காக பதிவு செய்து வைத்திருந்தேன். தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து பதில் அளித்தார். கொஞ்ச நாட்கள் ஆன்லைனில் சாட் செய்து பழகினோம். அந்த சமயத்தில் நாங்கள் சென்னை வருகிறோம். அங்கு வீடு பார்த்துள்ளேன். திருமணத்திற்காக வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி விட்டேன். அதனை கப்பலில் அனுப்பி வைக்கிறேன். இதற்காக
க்ஷீ
25 லட்சம் வங்கி கணக்கில் போட்டு விடு என்று காதல் வார்த்தைகளோடு பேசினார். இதனை நம்பி அனுப்பினேன். அவர் சொன்னபடி கப்பலில் ஒரு பார்சல் வந்தது. அதனை திறந்து பார்த்தால் பெரிய கழிவு பேப்பர் பண்டல் தான். எனக்கு பெரிய அதிர்ச்சி. பின்னர் அந்த நபரிடம் எந்த பதிலும் இல்லை� என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார்.
இதுபோல, தி.நகர் பெண் ஒருவரும், �என்னை திருமணம் செய்து கொள்கிறேன்� என்று கூறி
க்ஷீ
15 லட்சம் பறித்து விட்டதாக புகார் கூறியுள்ளார்.
இது தான் தற்போது நைஜீரிய கும்பலின் டார்கெட். இதுபற்றி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் உயர் போலீஸ் அதிகாரி கூறுகையில், �லாட்டரியில் பணம் விழுந்து இருக்கிறது என்று ஏமாற்றுபவர்கள் பற்றி மக்கள் நன்கு தெரிந்து கொண்டுள்ளார்கள். ஏனென்றால் எப்படி எல்லாம் ஏமாற்றுக்கிறார்கள் என்பது பற்றிய செய்தி தினமும் பத்திரிகைகளில் வருவதை பார்த்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், சிலர் இன்னும் ஏமாந்து போகத்தான் செய்கிறார்கள். தற்போது நைஜீரிய ஆசாமிகள் கையில் எடுத்து இருக்கும் ஆயுதம் திருமண வெப்சைட். சில திருமண வெப்சைட்டில் �விவாகரத்தான பெண்களுக்கு மாப்பிள்ளை வேண்டும்� என்று அறிவிக்கிறார்கள்.
இதனை தேடி பார்க்கும் அந்த ஆசாமிகள் அதில் உள்ள போட்டோக்கள், விவரங்களை பார்த்து எப்படி ஏமாற்றுவது என்று யோசித்து சுலபமாக பணத்தை திருடி விடுகிறார்கள். இதில் ஏமாந்தவர்கள் புகார் கொடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக இதில் பாதிக்கப்பட்டவர்கள் விவாகரத்து ஆன பெண்கள் தான்.
இவர்களை குறிவைத்து தான் நைஜீரிய மோசடி ஆசாமிகள் தங்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். இதனால் இப்படி போன்ற மோசடிகளை பார்த்து ஏமாற வேண்டாம்� என்றார்.
இது போன்ற புகார்கள் 10க்கும் மேற்பட்டவை வந்து விட்டது. நம் இந்தியர்களின் லட்சக்கணக்கான பணத்தை சீக்ரட்டாக நைஜீரிய மோசடி ஆசாமிகள் ஆன்லைன் என்னும் ரத்தம் வராத ஆயுதம் மூலம் மிரட்டாமல் பறித்து கொண்டிருப்பது பெரும் வேதனை அளிக்கிறது.
�வழுக்கி விழுந்து விட்டார்�
கடந்த
சில நாட்களுக்கு முன்பு கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த ஒரு பெண்ணின் புகாரில், �எனக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. குழந்தை இல்லை. விவாகரத்து ஆன பெண்களுக்கு மறுமணம் செய்வதற்குரிய வெப்சைட் பதிவு செய்து இருந்தேன். இதனை பார்த்த லண்டன் நபர் உடனே பதில் அளித்து திருமணத்திற்கு சம்மதித்தார். சந்தோஷப்பட்டு அவருடன் பழகினேன். போட்டோ அனுப்பினார். சென்னைக்கு அம்மாவை அழைத்து வருகிறேன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் அவர் சொன்ன தேதியில் ஏன் வரவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர் அம்மா பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டார். மேலும் என்னுடைய வங்கி கணக்கை எல்லாம் குளோஸ் செய்து விட்டேன் என்றார். நான் வருத்தப்பட்டு அம்மாவின் மருத்துவச் செலவுக்கு
க்ஷீ
20 லட்சம் அனுப்பி வைத்தேன். அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்னர்தான் எனக்கு புரிந்தது ஏமாந்து போய் விட்டோம் என்று. போலீசை நம்பி தான் உள்ளேன்� என்று கூறப்பட்டுள்ளது. இப்படியும் ஏமாறுகிறார்கள்.
இந்தியர்களின் லட்சங்கள் ரகசியமாய் பறிப்பு
மோசடிகள் இமெயில்கள் பலவிதம்

வங்கிகளிலிருந்து அனுப்பியது போன்ற தோற்றுத்துடன் வங்கியின் தகவல்களை சரிசெய்வதாக கூறி உங்களது வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு போன்ற தகவல்களை கேட்டு வரும் இமெயில்.

வங்கியிலிருந்து வரும் இமெயில் போன்ற தோற்றமுடன் 48 மணி நேரத்தில் நெட் பேங்கிங் வசதி நிறுத்தப்பட்டு விடும் என்றும் அதை தவிர்க்க �கிளிக் கெர்� என்று வரும் இமெயில்.

வங்கிகளிலிருந்து செக்யூரிட்டி அலார்ட் அல்லது பேங்க் அலார்ட் என்றும், உங்களது நெட் பேங்கிங் வசதியில் பிரச்னை என்றும் அதை சரி செய்ய �ப்ளீஸ் பாளோவ் தி லிங்க் டூ ரிசோல்வ் திஸ் பிராப்ளம்� என்று வரும் இமெயில்.

உங்களுக்கு நிறைய போலியான இமெயில்கள் வரும். அவற்றை நம்பவே வேண்டாம் என வங்கிகள் எச்சரிக்கை செய்வது போன்று வரும் இமெயில்.

லட்சக்கணக்கில் யூ.கே. பவுண்டு பரிசு விழுந்து இருக்கிறது என்று வரும் இமெயில்.

இமெயில் உபயோகிப்பவர்களில் நீங்கள் தான் சிறந்தவர்கள். அதனால் பிஎம்டபுள்யூ கார் பரிசு விழுந்திருப்பதாக வரும் இமெயில்.

வெளிநாட்டில் கோடீஸ்வரர் இறந்து விட்டார். அவருக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது. அனைத்தும் வங்கியில் இருக்கிறது. அதனை உங்களுடைய பெயருக்கு மாற்றி தர பணம் அனுப்புங்கள். உங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று வரும் இமெயில்.

லண்டனில் வசிக்கும் கோடீஸ்வர பெண்ணை தத்தெடுத்துக்கொண்டால் கோடிக்கணக்கில் சொத்து கிடைக்கும் என்று வரும் இமெயில்.

வெளிநாட்டில் வேலை பல லட்சம் சம்பளம் விசா பெற பணம் அனுப்புங்கள் என்று வரும் இமெயில்.

யூ.கே. கம்பெனியில் உங்களுக்கு வேலை கிடைத்து விட்டது. இந்தியாவுக்குரிய பொது மேலாளர் நீங்கள் தான். வெளிநாட்டிற்கு பணம் அனுப்புவது போன்ற முக்கிய வேலைகள் உங்கள் கையில் தான். இதனால் வங்கி கணக்கு ஆரம்பித்து கணக்கு எண் அனுப்புங்கள் என்று வரும் இமெயில்.

நீங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து பணம் சம்பாதிக்கலாம் என்றும் அதற்காக வங்கி கணக்கு ஆரம்பித்து எண், பாஸ்வேர்டு அனுப்புங்கள் என்று வரும் இமெயில்.
இதுபோன்ற
மோசடிகளில் சிக்கி தவியாய் தவிப்பதற்கு முன்பு சற்று யோசித்து செயல்பட்டால் அவமானத்தில் இருந்தும் பண இழப்பில் இருந்தும் தப்பிக்கலாம். இணையதளங்களில் வரும் தகவல்கள் எல்லாம் உண்மையானவையா? என்பது குறித்து விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் அல்லது நண்பர்களிடம் அல்லது நமக்கு மிகவும் நெருங்கிய உறவினர்களிடம் தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வந்த தகவல் என்றால் அது குறித்து அந்த நாட்டில் உள்ள நமது தூதரகம் மூலம் தகவலை உறுதி படுத்திக் கொள்ளலாம். கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மேல் என்பதைப் போல விழிப்புடன் செயல்பட்டால் துன்பம், துயரம் எதுவும் நம்மை நாடி வராது.
nanri : dinakaran news 

1 கருத்துரைகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    உண்மையை சொல்லும் வித்தியாசமான கட்டுரை,சிறந்த கருத்துக்கள் உங்கள் தளம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com

    பதிலளிநீக்கு

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-